எந்திரன் 2ல் ரஜினி நடிக்கிறார், ஆனால் இன்னொரு ஹீரோவும் உள்ளார்
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்திரன் 2 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வெற்றிப்படம் எந்திரன். இதையடுத்து எந்திரன் 2 படத்தை எடுக்க முடிவு செய்தார் ஷங்கர். இது தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசினார்.
ஆனால் படத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

அஜீத்
உடல் நலனை கருத்தில் கொண்டு எந்திரன் 2 படத்தில் நடிக்க ரஜினி தயங்குவதாக கூறப்பட்டது. மேலும் அந்த படத்தில் அஜீத்தை நடிக்க வைக்கலாமே என்று அவர் ஷங்கருக்கு ஐடியா கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஆமீ்ர் கான்
ரஜினி நடிக்க மறுத்ததை அடுத்து ஷங்கர் பாலிவுட் நடிகர் ஆமீர் கானை வைத்து எந்திரன் 2 படத்தை எடுத்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரிலீஸ் செய்யப் போகிறார் என்று கூறப்பட்டது.

ரஜினி
ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 8ம் தேதி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போ ஆமீர்?
எந்திரன் 2ல் ரஜினி மட்டும் இல்லை. ஆமீர் கானும் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், பல ஆண்டுகள் கழித்து ரஜினி 2 ஹீரோக்கள் உள்ள படத்தில் நடிக்கும் பெருமையைப் பெறுவார்.


Click it and Unblock the Notifications











