கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி
Recommended Video

சென்னை:கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி மற்றும் சிம்ரனின் கதாபாத்திரம் பற்றி தெரிய வந்துள்ளது.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் பகலில் வாத்தியாராகவும் இரவில் கெட்டவர்களை அடக்கும் டானாகவும் நடிக்கிறாராம்.
முன்னதாக அவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திலும் இதே போன்ற கதாபாத்திரம் தான். கார்த்திக் சுப்புராஜ் தன் படத்தில் என்ன வித்தியாசம் வைத்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹீரோயின் சிம்ரனுக்கு பிளாஷ்பேக்கில் மட்டுமே வேலையாம். காலா ஈஸ்வரி ராவ் போன்று கதை முழுக்க வரும் வெயிட்டான கதாபாத்திரம் இல்லையாம். இது சிம்ரன் ரசிகர்களை நிச்சயம் கவலை அடைய வைக்கும்.
விஜய் சேதுபதி பயங்கரமான வில்லனாக நடிக்கிறாராம். அதுவும் ரஜினிக்கு இணையான கதாபாத்திரமாம். இந்த படத்தில் ரஜினியை அறிமுகப்படுத்த மாஸான பாடல் வைக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.


Click it and Unblock the Notifications











