Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கபாலி டயலாக் ரஜினி சாருக்கு பிடிக்கவில்லை!
சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்களை இயக்க தயாராகி வருகிறார்
பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன
இந்த நிலையில் கபாலி வசனம் ரஜினி சாருக்கு பிடிக்கவில்லை என இயக்குனர் பா ரஞ்சித் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கட்டிப்பிடித்த
பாலா..
ஆத்திரத்தில்
கடித்த
ரம்யா
பாண்டியன்..
பிக்
பாஸ்
அல்டிமேட்
அலப்பறைகள்!

மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார்
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித் முதல் படத்திலேயே வித்தியாசமான படைப்பை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த ரஞ்சித்துக்கு ஜாக்பாட் அடித்தது போல மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிகாந்த் வழக்கமான தன்னுடைய கமர்ஷியல் பார்முலாவில் படங்களை செய்து வந்த நிலையில் பா ரஞ்சித் உடன் முதல் முறையாக இணைந்த கபாலி திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான ரோலில் ரஜினி நடித்திருப்பார்.

கோட்டு சூட்டுடன் சும்மா கெத்தா
சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம் பட்டிதொட்டியெங்கும் மிக பிரபலமாக பேசப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். வயதான தோற்றத்தில் கோட்டு சூட்டுடன் சும்மா கெத்தா மாஸா ரஜினி இந்த படத்தில் நடித்திருக்க வழக்கமான ரஜினி படங்களை விடவும் கபாலியில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் ரஜினிகாந்த்.

வசனம் பிடிக்கவில்லை
இந்த நிலையில் ரஜனிகாந்த் கபாலி படத்தில் பேசிய ஒரு குறிப்பிட்ட வசனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த வசனம் எடுக்கப்பட்டபோது ரஜினிகாந்துக்கு அந்த வசனம் பிடிக்கவில்லையாம். இந்த மாதிரி தான் பேசினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என சந்தேகத்துடனேயே ரஜினிகாந்த் அந்த வசனத்தை பேசி உள்ளார்.

செம வைரலானது
பா ரஞ்சித் கண்டிப்பாக இந்த வசனம் ஹிட்டாகும் சார் என நம்பிக்கையாக கூறியுள்ளார். ரஞ்சித் கூறியதைப் போலவே ரஜினிகாந்த் பேசிய அந்த குறிப்பிட்ட வசனம் டீசரில் இடம்பெற்றது. அந்த வசனம் செம வைரலானது.

நீங்க சொன்னது கரெக்ட்டு சார்
டயலாக் மிகப்பெரிய வைரலான செய்தியை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் உடனடியாக பா ரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்க சொன்னது தான் கரெக்ட்டு சார்.. டயலாக் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு இனி நீங்க எது சொன்னாலும் கரெக்டா தான் இருக்கும். இனி நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கறேன் உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு என ரஜினிகாந்த் கூறியதை ரஞ்சித் பேட்டி என்றில் பகிர்ந்துள்ளார்.