"ரஜினி சார் பேசிட்டார்.. இப்போது மனநிம்மதியாக இருக்கிறது..”மீண்டும் உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகை

ரஜினி தன்னுடன் பேசியதாக நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

Recommended Video

ரஜினி தன்னுடன் பேசியதாக வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கு உதவி செய்வதாக நடிகர் ரஜினி உறுதியளித்துள்ளார்.

தமிழில் ப்ரண்ட்ஸ் உள்பட சில படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினர். பின்னர் அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் விஜயலட்சுமி, யாருடைய உதவியும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில், தனது கஷ்டங்கள் பற்றி பேசியிருந்தார் விஜயலட்சுமி. மேலும், அதில் 'நான் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன், நான் அழிஞ்சு போகணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.

ரஜினி உதவி தேவை:

ரஜினி உதவி தேவை:

என் குடும்பம் இப்போ சொல்ல முடியாத கஷ்டத்துல இருக்கு. இங்க நானு, எங்கம்மா, எங்க அக்கானு மூணு லேடீஸ் ரொம்பக் கஷ்டத்துல இருக்கோம். இதை சூப்பர்ஸ்டார் ரஜினி சாரால் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனா, எப்டி அவரை நேர்ல சந்திக்கிறதுனு எனக்குத் தெரியல.

பரிதாபம்:

பரிதாபம்:

இந்த வீடியோ எப்படியும் அவர் பார்வைக்கு போகும்னு நம்புறேன்" என உருக்கமாக அவர் தெரிவித்திருந்தார். சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகப் பரவியது. விஜயலட்சுமியின் பரிதாப நிலை கண்டு, நெட்டிசன்கள் வருத்தப் பட்டனர்.

ரஜினி பேசினார்:

ரஜினி பேசினார்:

இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. அதில் அவர், "ரஜினி சாரிடம் பேச வேண்டும் என நான் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அவர் பேசுவாரா என எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் இன்று காலை என்னை போனில் அழைத்து பேசினார். மிகவும் மனிதாபிமானத்துடன் பேசி, எனது பிரச்சினைகளை சரி செய்வதாகக் கூறினார்.

பாராட்டு:

பாராட்டு:

ரஜினி சாரின் இந்த அக்கறை மிகவும் மனிதாபிமான செயல். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவர் மீது எனக்கிருந்த மரியாதை நூறு மடங்கு அதிகமாகிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் ஒரு பிரச்சினையை முடிக்கும் ஆற்றல் ரஜினி சாருக்கு உள்ளது.

மனநிம்மதி

மனநிம்மதி

ஒரு ரசிகையாகத் தான் அவரிடம் உதவி கேட்டேன். அதை மதித்து எனக்கு உதவியிருக்கிறார். அவர் மிகப் பெரிய மனிதர். எனக்கு மனது நிம்மதியாக உள்ளது. ரஜினி சார் எனக்கு நிச்சயம் உதவுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை", என அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X