ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி.... இந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ஜோடி! #Sridevi
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஜோடிகளுள் ஒன்று ரஜினி - ஸ்ரீதேவி.
ரஜினிகாந்த் ஒரு நடிகராக அபூர்வ ராகங்களில் அறிமுகமானார். அதில் அவருக்கு சிறிய ரோல்தான். ஆனால் அடுத்த படமான மூன்று முடிச்சில் அவர் எதிர் நாயகனாக வந்தார். படம் முழுக்க ரஜினிகாந்தின் ஆதிக்கம். அவருக்கு நிகரான வேடத்தில் ஸ்ரீதேவி. பல காட்சிகளில் ரஜினிகாந்தை மடக்கி, அவரை ஜெயிக்கும் காட்சிகள்.

அதன் பிறகு ரஜினியும் ஸ்ரீதேவியும் பல படங்களில் ஜோடி சேர்ந்தனர். தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஜோடி என்றால் அது ரஜினி - ஸ்ரீதேவி அல்லது ரஜினி - ஸ்ரீப்ரியா எனும் அளவுக்கு இந்த இருவர்தான்.
ரஜினியும் ஸ்ரீதேவியும் தொடர்ந்து 16 வயதினிலே, காயத்ரி, ப்ரியா, தர்மயுத்தம், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ஜானி, அடுத்த வாரிசு, அஸ்லி நக்லி, நான் அடிமை இல்லை, கைர் கனூனி, ஃபரிஷ்டே உள்பட 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தனர்.
இந்திய சினிமாவில் ஸ்ரீதேவி அதிகப் படங்களில் சேர்ந்து நடித்தது ரஜினிகாந்துடன்தான். தமிழில் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகும், இந்தியில் தொடர்ந்து ரஜினியுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











