தர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய போட்டோக்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தர்பார். இந்த படத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், யோகி பாபு, மனோ பாலா, சுமன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொங்கல் ரிலீஸ்
வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் தர்பார் படம் வெளியாகவுள்ளது.

போலீஸ் யூனிஃபார்ம்
இந்த படத்தின் போஸ்டரை நான்கு மொழிகளிலும் கமல்ஹாசன், மகேஷ்பாபு, சல்மான்கான் மற்றும் மோகன்லால் ஆகியோர் அண்மையில் வெளியிட்டனர். போஸ்டரில் போலீஸ் யூனிஃபார்மில் ரஜினி கம்பீரமாக இருந்தார்.

மோஷன் போஸ்டர்
படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் நடிக்கிறார் ரஜினி. அண்மையில் வெளியான மோஷன் போஸ்டரில் அப்பெயரில் இருந்த பேட்ஜை சட்டையில் அணிந்து இருந்தார் ரஜினிகாந்த்.

டப்பிங் பணிகள்
படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துள்ள நிலையில் டப்பிங் வேலைகள் மும்முரமாய் நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் ஜாலி
ரஜினி டப்பிங் பேசும் போட்டோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் செம ஜாலி மூடில் உள்ளனர்


Click it and Unblock the Notifications











