வாழ்நாளின் முதல் பொக்கிஷம்... அடிக்கடி ரகசியமாக போட்டோ எடுத்துக்கொள்ளும் ரஜினி: தலைவர் தலைவர் தான்!
சென்னை: தமிழ்த் திரையுலகின் நிரந்தரமான சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த்.
47 ஆண்டுகளாக தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் ரஜினி, அடுத்ததாக 'ஜெயிலர்' படத்தில் நடிக்கவுள்ளார்.
என்றைக்கும் பழசை மறக்காத பண்பு கொண்ட ரஜினி, தனது வாழ்நாள் பொக்கிஷத்தை நினைத்து தினமும் உருகி வருகிறார்.

அபூர்வமாக பூத்த கலைஞன்
சூப்பர் ஸ்டார் ரஜினி என்றதுமே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது, அவரின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' தான். பாலசந்தரின் அறிமுகமாக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த ரஜினி, பாலசந்தர் இறக்கும் வரையிலும் அவரது செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார். ஆரம்ப காலங்களில் பாலசந்தர் நிறைய பட வாய்ப்புகள் கொடுத்தாலும், பல சோதனைகளை கடந்தே சாதனைப் படைத்துள்ளார் ரஜினி.

அவமானங்களை சந்தித்த ரஜினி
நிறைய படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் தோன்றிய ரஜினி, இன்னும் சில திரைப்படங்களில் வில்லனாகவும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அதேபோல் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பின்னரும், தனக்கென ஒரு இடம் கிடைக்கும் வரை பல அவமானங்களை சந்தித்துள்ளா ரஜினி. அதைப் பற்றி பல மேடைகளில் நினைவுகூர்ந்துள்ள சூப்பர் ஸ்டார், அதில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பதையும், ரொம்பவே சுவாரஸ்யமாகக் கூறுவதுண்டு

சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ரஜினி
பாலசந்தர் இயக்கியப் படங்களில் கமலுடன் அதிகமாக நடித்துள்ளார் ரஜினி. ஒருகட்டத்தில் இருவரும் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த பின்னர், ரஜினி தனக்கான ரூட்டை பிடித்து உயரத் தொடங்கினார். ரஜினியின் ஸ்டைலில் மயங்கிய ரசிகர்கள், அவரை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகுப் பார்த்தனர். பஸ் கண்டெக்டரில் இருந்து சூப்பர் ஸ்டாராக மாறிய ரஜினிக்கு, எல்லாமே கூடிவந்தது எனலாம்.

கார்களின் மீது தீவிரமான காதல்
நடிப்பைத் தவிர்த்துவிட்டு ரஜினிக்கு மிகவும் பிடித்ததை பட்டியலிட்டால் அதில் காருக்கு தான் முதல் இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் நடிக்க சென்ற இடத்தில் ரஜினியை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் ஒருவர், அவருக்கு கார் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன ரஜினி, அதை வைராக்கியமாக மனதில் வைத்துக் கொண்டு முதன்முதலாக ஒரு கார் வாங்கியுள்ளார். இந்த நினைவுகளை அவர் ஒரு விழாவில் பேசியது, பயங்கர வைரலாகியது.

பொக்கிஷமாக பாதுகாக்கும் ரஜினி
இன்று, சூப்பர் ஸ்டாராக பல அதிநவீன வெளிநாட்டு கார்களை வாங்கிக் குவித்துவிட்டார் ரஜினி. ஆனாலும், அவருக்கு மிகவும் பிடித்தது முதன்முதலாக வாங்கிய பிஃயட் பத்மினி கார் தானாம். வெள்ளை நிறத்தில் 'TMU 5004' என்ற ரிஜிஸ்டர் எண் கொண்ட அந்த காரை, ரஜினி இன்றும் பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம். அதுமட்டும் இல்லாமல், அடிக்கடி அதன் அருகே நின்று போட்டோ எடுத்துக்கொள்வதோடு, அதில் ரகசியமாக ரவுண்டும் போய் வருகிறாராம். இந்த சம்பவத்தால் நெகிழ்ந்துபோன ரஜினியின் ரசிகர்கள், 'தலைவர் தலைவர் தான்' என புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











