Rajini: "நட்புன்னா என்னன்னு தெரியுமா?” நண்பன் மறைந்தாலும் அவர் குடும்பத்தை விட்டுக்கொடுக்காத ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஜெய் பீம்' புகழ் த.செ ஞானவேல் இயக்குகிறார்.

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினியின் இந்த வளர்ச்சிக்கு, அவரது நண்பர்கள் மிக முக்கிய காரணம்.

இந்நிலையில் தனது நண்பர் மறைந்தாலும் அவரது குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் தலைவர் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Rajini: Super Star Rajini met with his friend and Director Mahendran grandson

தலைவரின் நட்புக்கு மரியாதை மொமண்ட் கோலிவுட்டின் லைஃப் டைம் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். சின்ன சின்ன கேரக்டர்கள், கேமியோ ரோல் என சினிமாவில் அடியெடுத்து வைத்த ரஜினி, இன்று சூப்பராக மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் வெளியாகிறது. அடுத்தடுத்து தலைவர் 170, தலைவர் 171 படங்கள் அவரது லைன் அப்பில் உள்ளன. இதில் தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினியின் லேட்டஸ்ட் போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இந்த போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். ரஜினியின் நடிப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுத்த படங்களை இயக்கியவர் மகேந்திரன். முள்ளும் மலரும் என்ற இந்த ஒரு படமே போதும். ரஜினி வெறும் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அவர் ஒரு மகா நடிகன் என்பதை நிரூபிக்க.

தனது குருவாக மதிக்கும் கே பாலசந்தரை விடவும், மகேந்திரனின் படங்களில் நடிப்பதையே அதிகம் விரும்பினார் ரஜினி. இதனை ஒரு மேடையில் பாலசந்தரிடமே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இயக்குநர் மகேந்திரன் உயிருடன் இல்லையென்றாலும், அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறார். அப்படி ஒரு போட்டோவை தான் ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ளார்.

அதாவது தனது மகனுடன் சூப்பர் ஸ்டார் ரஜினி எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்து சூப்பரான கேப்ஷன் கொடுத்துள்ளார். "நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன் மறைந்தாலும், அவர் குடும்பத்தின் மேல் அக்கறை கொள்வது. இயக்குநரும் தனது நண்பருமான மகேந்திரனின் பேரன் கெவின் தாமஸுடன் ரஜினி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X