Rajini: அண்ணாத்த தோல்வி... ஜெயிலர் பட்ஜெட்... கோடிக்கணக்கில் சம்பளத்தை குறைத்த ரஜினி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று வெளியான ஜெயிலர் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இதனிடையே இப்படத்திற்காக ரஜினி கோடிக்கணக்கில் சம்பளத்தை குறைத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலருக்காக சம்பளத்தை குறைத்த ரஜினி:கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது. அண்ணாத்த படத்திற்குப் பின்னர் ரஜினி நடிப்பில் ஜெயிலர் வெளியாகவுள்ளதால், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை இன்னும் எகிற வைக்கும் விதமாக நேற்று ஜெயிலர் ட்ரெய்லரும் வெளியாகி வைரலாகி வருகிறது. டைகர் முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் நடித்துள்ள ரஜினியின் ஆக்ஷன் ட்ரீட்டை கொண்டாட ரசிகர்களும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தின் வெற்றி தான் ரஜினியின் லால் சலாம், தலைவர் 170 படங்களின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ்க்கு கை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

முக்கியமாக ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் மிக மோசமான கலெக்ஷன் தான் கிடைத்தன. அதேபோல், பீஸ்ட் படத்தில் மரண அடி வாங்கிய நெல்சன் ஜெயிலரில் ரஜினியுடன் இணைந்தார். இந்தக் கூட்டணியில் ஜெயிலர் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தரப்பில் முதலில் யோசிக்கப்பட்டதாம்.
இதற்கு காரணம் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா என லீடிங் ஸ்டார்ஸ் நடிப்பதால் அவர்களின் சம்பளத்துக்காகவே தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் அதிகம் பட்ஜெட் போடப்பட்டதால் ரஜினியிடம் சம்பளத்தை குறைக்க முடியுமா என தயாரிப்புத் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாம்.

ஏற்கனவே தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டு இருந்த ரஜினிக்கு ஜெயிலர் மட்டும் தான் தற்போதையை நம்பிக்கையாக இருந்துள்ளது. அதனால், வழக்கமாக ஒரு படத்துக்கு 100 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், ஜெயிலருக்காக ரூ.25 கோடி குறைத்துள்ளாராம். அதன்படி ஜெயிலர் படத்துக்காக 75 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார் ரஜினி.


Click it and Unblock the Notifications











