Rajini: கடைசி நேரத்தில் சொதப்பிய நெல்சன்... மீண்டும் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி!

By Staff

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்தப் படத்தில் ரஜினியின் போர்ஷன் முழுவதும் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், கடைசி நேரத்தில் மீண்டும் ரஜினியின் காட்சிகளை படமாக்கவுள்ளாராம் நெல்சன் சேவியர்.

 Rajini: Super Star Rajini will attend the final shoot of the Jailer film

மீண்டும் ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. நெல்சன் சேவியர் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட ஜெயிலர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் மினி டீசராகவே வெளியாகி வைரலானது. அதோடு ரஜினியின் போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், அதனால் அவர் லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை சென்றதாகவும் சொல்லப்பட்டது.

அதேபோல், ஜெயிலர் படத்தில் ரஜினியின் போர்ஷனுக்கான எடிட்டிங் முடிந்துவிட்டதால் அவர் டப்பிங் கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் விரைவில் டப்பிங் கொடுக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இதனிடையே ஜெயிலர் படத்திற்காக ஒரு பாடலுக்கான ரிகர்சல் செய்த போட்டோவை தமன்னா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். அதனால், ஜெயிலர் படப்பிடிப்பு இன்னும் நடந்துகொண்டிருப்பது கன்ஃபார்ம் ஆனது.

 Rajini: Super Star Rajini will attend the final shoot of the Jailer film

இந்நிலையில், இந்தப் பாடல் காட்சியில் ரஜினியும் நடிக்கலாம் எனத் தெரிகிறது. கடைசி நேரத்தில் ரஜினியிடம் பேசிய நெல்சன், நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளாராம். லால் சலாம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தலைவர் 170 படத்தில் இணைந்துவிடலாம் என நினைத்த ரஜினிக்கு இது கொஞ்சம் ஷாக்கிங்காக இருந்துள்ளது. இருந்தாலும் வேறுவழியே இல்லாமல் நெல்சனுக்கு ஓக்கே சொல்லிவிட்டாராம் ரஜினி.

அதனால், மீண்டும் ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார் சூப்பர் ஸ்டார். மேலும், அவர் நடிக்கும் காட்சிகளுடன் ஜெயிலர் படப்பிடிப்பு மொத்தமாக முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மீதமிருக்கும் டப்பிங் பணிகளையும் மொத்தமாக முடித்துவிட ரஜினி பிளான் செய்துள்ளாராம். ஜெயிலர் திரைப்படம் வெளியாக இரண்டு மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை என்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X