Rajini: கியாரே மொய்தீன் பாயா இது..? லால் சலாம் புது கெட்டப்பில் மிரட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

புதுவை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக அவர் நடித்து வந்த ஜெயிலர் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து லால் சலாம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக புதுவை சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார்.

அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவில் புதிய லுக்கில் இருப்பது வைரலாகி வருகிறது.

 Rajini: Super star Rajinikanth With Makeup Artist At Lal Salaam shooting spot

புது லுக்கில் லால் சலாம் மொய்தீன் பாய்:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, ரஜினி கேமியோ ரோலில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். மும்பையில் நடைபெற்ற லால் சலாம் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி இருந்தன.

இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகுவதால் கபில் தேவ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லால் சலாம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையை தொடர்ந்து புதுவையில் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று புதுச்சேரி சென்றுள்ளார். அங்கே அவரைப் பார்ப்பதற்கு காத்திருந்த ரசிகர்களுக்கு, காரில் இருந்தபடியே கை காட்டிவிட்டு படப்பிடிப்புக்குச் சென்றார் ரஜினி.

 Rajini: Super star Rajinikanth With Makeup Artist At Lal Salaam shooting spot

அதன்பின்னர் லால் சலாம் புதுவையில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்காக அவர் மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற வேட்டி, சட்டையில் செம்ம ஸ்டைலாக இருக்கும் ரஜினி, தனது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரியல் மொய்தீன் பாய் லுக்கில் இருந்தார் சூப்பர் ஸ்டார்.

ஆனால், தற்போது வேட்டி, சட்டையில் மாஸ் காட்டுகிறார். ரஜினிக்கு இப்படியொரு கெட்டப் லால் சலாம் படத்தில் உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. இதனிடையே புதுவையில் நடக்கும் படப்பிடிப்புடன் ரஜினியின் போர்ஷன் முடிவுக்கு வரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X