Rajini: ரெட்ரோ லுக்கில் ரஜினி கொடுத்த சேட்டன் வைப்... ‘தலைவா’ என ஆர்ப்பரித்த கேரள ரசிகர்கள்!!
திருவனந்தபுரம்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், இயக்குநர் தசெ ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தலைவர் 170 படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது ரஜினி கேரள ரசிகர்களை சந்தித்த போட்டோஸும் வீடியோவும் வைரலாகி வருகின்றன.

சேட்டன் வைப் கொடுத்த தலைவர்
ஜெயிலர் படத்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டால் கெத்தாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஜெயிலரைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு லால் சலாம் படமும் வெளியாகவுள்ளது. அதேவேகத்தில் அடுத்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மல்லுவுட் மாஸ் ஹீரோ ஃபஹத் பாசில், டோலிவுட் ஸ்டார் ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் 170 அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 170 படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக, மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் பவர்ஃபுல் கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் ரஜினியின் ஹேர்ஸ்டைல், லுக் அனைத்துமே ரொம்பவே இளமையாக இருந்தது. ஜெயிலர் கொடுத்த வெற்றியால், தலைவர் 170 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தலைவர் 170 படத்திற்காக ரெட்ரோ லுக்கில் இருக்கும் ரஜினியின் போட்டோ வைரலாகி வருகிறது.
ஜெயிலர், லால் சலாம் படங்களின் படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை, புதுச்சேரி சென்றிருந்த ரஜினியை பார்க்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர் காரில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அதேபோல், இப்போது தலைவர் 170 படத்திற்காக திருவனந்தபுரம் சென்றுள்ள ரஜினியை பார்க்க, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர்.
இதனால் வழக்கம்போல காரின் சன்ரூஃப் விண்டோ வழியாக எட்டிப் பார்த்த ரஜினி, ரசிகர்களுக்கு கையெடுத்து கும்பிட்டு வணக்கம் கூறினார். தலையில் கேப், ரெட்ரோ லுக் என செம்ம மாஸ்ஸாக உள்ள ரஜினியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இன்னொரு வீடியோவில் ரஜினி ரசிகர்களை இரவு நேரத்தில் சந்தித்துள்ளார். இதுவும் தலைவர் 170 படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











