Rajini: அடடே!! சிவாஜி, விஜயகாந்துடன் சூப்பர் ஸ்டார்... ரஜினியின் ஃபேவரைட் போட்டோ இதுதானா..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதுவரை சிவாஜி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என 90ஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் ரஜினி.

ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினி - கேப்டன் விஜயகாந்த் காம்போ மட்டும் இதுவரை இணைந்ததே இல்லை.

இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி, கேப்டன் விஜயகாந்த், பிரபு ஆகியோருடன் ரஜினி எடுத்துக்கொண்ட த்ரோபேக் போட்டோ வைரலாகி வருகிறது.

 Rajini: Superstar Rajini photo with Sivaji and Vijayakanth is trending

கேப்டன் விஜயகாந்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினி: கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாஸ் காட்டி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. 70 வயதை நெருங்கிவிட்டாலும் இன்னும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுப்பதில் தலைவர் தான் கெத்து எனலாம். சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலரில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், ராணா நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்குப் பிறகு மல்டி ஸ்டார்ஸ் காம்போவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது கேரியரின் ஆரம்பகாலத்தில் கமலுடன் அதிகமான படங்களில் நடித்தார் ரஜினி. அதேபோல், கார்த்திக், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார் ரஜினி. ஆனால், கேப்டன் விஜயகாந்துடன் மட்டும் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் போது, அதில் விஜயகாந்த் ஆதித்ய கரிகாலனாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம்.

 Rajini: Superstar Rajini photo with Sivaji and Vijayakanth is trending

இதனை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் கூறியிருந்தார் ரஜினி. ரசிகர்கள் மத்தியில் ரஜினி - விஜயகாந்த் இருவரும் எதிரெதிர் துருவங்களாகவே பார்க்கப்பட்டனர். அதேபோல், விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் கேப்டனின் வீடு தேடி சென்று நலம் விசாரித்தார் ரஜினி. அப்போது விஜயகாந்தை ரஜினி சந்தித்த வீடியோ வைரலானது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி - கேப்டன் விஜயகாந்த் இருவரும் எடுத்துக்கொண்ட த்ரோபேக் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இவர்களுடன் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி, இளைய திலகம் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோரும் உடனிருக்கின்றனர். இது சின்ன கவுண்டர் படம் தொடங்கும் போது அல்லது அதன்பின்னர் எடுக்கப்பட்ட போட்டோ என சொல்லப்படுகிறது. இந்தப் போட்டோவில் ரஜினி, விஜயகாந்த், சிவாஜி மூவருமே வெள்ளை நிற உடையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X