Rajini: "ரஜினி இப்படியொரு படத்துல நடிச்சாரா..?” வேட்டையன் 2.O லுக்கில் சூப்பர் ஸ்டார்!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்நிலையில் தனது மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரலாகி வருகிறது.

 Rajini: Superstar Rajinikanth in Rana Look throwback photo is trending
ரஜினியின் த்ரோபேக் போட்டோ
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார்.

இதனிடயே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் ரஜினி. லைகா தயாரித்துள்ள இந்தப் படம் 2024 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தனது மகளின் இயக்கத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். முன்னதாக செளந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் த்ரோபேக் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது செளந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படமாக வெளியானது. இதில், ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் செளந்தர்யா.

125 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான கோச்சடையான் அதிகம் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், சூப்பர் ஸ்டாரை ஒரிஜினலாக திரையில் பார்க்க முடியாத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னதாக இந்தப் படம் ராணா என்ற டைட்டிலில் பீரியட் ஜானர் மூவியாக உருவாக இருந்தது. இதில், ரஜினியுடன் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கவிருந்தனர்.

ஆனால், படப்பிடிப்புத் தொடங்கிய சில தினங்களிலேயே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் ரஜினி. அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் அப்போது ராணா திரைப்படம் ட்ராப் ஆனது. அப்போது ராணா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ரஜினியின் போட்டோ இப்போது வைரலாகி வருகிறது. இதில் சந்திரமுகி வேட்டையன் லுக்கில் மாஸ் காட்டுகிறார் சூப்பர் ஸ்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X