Rajini: வாரே வா!! தீபாவளி பட்டாசாய் தெறிக்கும் தலைவர் போஸ்டர்... ரஜினி ரசிகாஸ் வெறித்தனம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை தசெ ஞானவேல் இயக்குகிறார்.

ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் செம்ம ஸ்டைலிஷான போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

 Rajini: Superstar Rajinikanths 170 fanmade poster is trending

தீபாவளி பட்டாசாய் தெறிக்கும் தலைவர் போஸ்டர்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தெறி மாஸ் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தை ஹிட்டாக்கிய அதே வேகத்தில், தலைவர் 170-ல் நடித்து வருகிறார் ரஜினி. ஜெயிலர் கொடுத்த கம்பேக்கால் தலைவர் 170 படம் மீதான எதிர்பார்ப்பும் எகிறிப் போயுள்ளது. ஜெய்பீம் படம் மூலம் கவனம் ஈர்த்த தசெ ஞானவேல், தலைவர் 170-ஐ இயக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அதேபோல், ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மல்லுவுட் ஹீரோ ஃபஹத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜெயிலரில் இருந்து மல்டி ஸ்டார்ஸ் மோடுக்கு மாறிவிட்டார் தலைவர். இதனால் தலைவர் 170 படமும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் ரஜினியின் போஸ்டர் வெறித்தனமாக வைரலாகி வருகிறது. ஏற்கனவே தீபாவளி ஸ்பெஷலாக தலைவர் 170 அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கெல்லாம் சேர்த்து இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. ஜீன்ஸ், பிரிண்டட் ஷர்ட், கூலர்ஸ், சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் என மரண மாஸ் காட்டுகிறார் தலைவர்.

செம்ம ஸ்லிம் ப்ளஸ் ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டும் ரஜினியின் இந்தப் போஸ்டரை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இது தலைவர் 170 படக்குழு வெளியிட்ட அபிஸியல் போஸ்டர் இல்லை என சொல்லப்படுகிறது. ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோ அல்லது ஃபேன் மேட் போஸ்டராக இருக்கும் எனத் தெரிகிறது.

 Rajini: Superstar Rajinikanths 170 fanmade poster is trending

முன்னதாக தலைவர் 170 படத்தின் மும்பை படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தற்போது ஓய்வில் இருக்கிறார். தீபாவளிக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. தலைவர் 170 ஷூட்டிங் முடிந்ததுமே, அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் இணையவுள்ளார் ரஜினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X