கமல் 60ல் ரஜினியின் நேற்று இன்று நாளைய பேச்சு.. என்ன சொல்ல வருகிறார்!

Recommended Video

கமல் 60ல் ரஜினியின் நேற்று இன்று நாளைய பேச்சு

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினியின் நேற்று இன்று நாளைய பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 60 சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் உங்கள் நான் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷங்கர், மணிரத்னம் உட்பட பல இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, வடிவேல், கார்த்தி, பார்த்திபன், உள்ளிட்ட பல நடிகர்களும் தமன்னா, மீனா, அம்பிகா, ராதா உட்பட நடிகைகள் பலர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பாடல்களை பாடி

பாடல்களை பாடி

இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இளையராஜாவுடன் இணைந்து கமலும் பாடல்களை பாடினார்.

ரஜினியின் பேச்சு

ரஜினியின் பேச்சு

இந்நிகழ்ச்சியில் கமலின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய பேச்சு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது ரஜினியின் ரசிகர்களை குதுகலிக்க செய்தது.

ஆட்சி நீடிக்காது

ஆட்சி நீடிக்காது

அதாவது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் முதல்வரானார். நான்கு, ஐந்து மாதங்கள் கூட அவரது ஆட்சி நீடிக்காது என தமிழகத்தில் சொல்லாதவர்களே கிடையாது.

நேற்று இன்று நாளை

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆட்சி கவிழவில்லை. அதிசயமும் அற்புதமும் நேற்று நடந்தது. அந்த அதிசயமும் அற்புதமும் இன்றும் நடக்கிறது. இந்த அதிசயமும் அற்புதமும் நாளையும் நடக்கும் என்றும் கூறினார்.

கட்சி தொடங்கவில்லை

கட்சி தொடங்கவில்லை

ரஜினியின் இந்த நேற்று இன்று நாளைய பேச்சுதான் இன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கமல் அரசியல் கட்சி தொடங்கி, தேர்தல் களத்தையும் கண்டுவிட்டார். அரசியலுக்கு வருவதை உறுதிபடுத்தியிருக்கும் ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை.

இன்டைரக்ட்டாக சொல்கிறாரா?

இன்டைரக்ட்டாக சொல்கிறாரா?

இந்நிலையில் நேற்று நடந்த அதிசயம் அற்புதம், இன்று நடக்கும் அதிசயம் அற்புதம், நாளையும் நடக்கும என தெரிவித்திருப்பது அவர் நாளை முதல்வராவார், அந்த அதிசயமும் அற்புதமும் நிகழும் என்பதை இன்டைரக்ட்டாக சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X