அமெரிக்காவில் ஹாயாக மெட்ரோவில் சென்ற ரஜினி: வைரல் புகைப்படம்
Recommended Video

நியூயார்க்: ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஹாயாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
உடல்நல பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அரசியல் கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகாவது ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா செல்லும் முன்பு இமயமலைக்கு வேறு சென்றுவிட்டு வந்தார்.

மெட்ரோ
அமெரிக்காவில் மெட்ரோ ரயிலில் ரஜினி ஹாயாக பயணம் செய்துள்ளார். கூலிங் கிளாஸ் அணிந்து அவர் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வரைலாகியுள்ளது.

நலம்
ரஜினி அமெரிக்காவில் 2 வாரங்கள் ஓய்வெடுக்கிறார். தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்த்தால் ரஜினி சீரியஸாக ஏதோ யோசனையில் மூழ்கியிருப்பது போன்று உள்ளார்.

அறிவிப்பு
பாதி அரசியல்வாதியாக உள்ள ரஜினி முழு அரசியல்வாதியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ரிலீஸ்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் தள்ளிப் போய் தள்ளிப் போய் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. காலா ரிலீஸின்போது ரஜினி சென்னையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











