Rajini: ரஜினியோட குறிக்கோள் அதுதான்... அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்... இதுதான் உண்மையா..?
சென்னை: ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், கடந்த வாரம் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
அப்போது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 10ம் தேதி ஜெயிலர் ரிலீஸாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் நேற்று வெளியானது.
ஜெயிலர் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் கடந்த வாரம் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதற்கெல்லாம் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு தான் ஆசைப்பட்டது இல்லை என்றும், அதேநேரம் அதனை நினைத்து பயந்தது கிடையாது எனவும் கூறினார்.
மேலும், 'காகம் - பருந்து' என குட்டி ஸ்டோரியும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதுமட்டும் இல்லாமல் இப்போதெல்லாம் அவரை யாரும் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இனிமேல் வசூல் ரீதியாக மாஸ் காட்டுபவர் தான் சூப்பர் ஸ்டார் எனவும் அவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவாக பிரபல சினிமா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். முக்கியமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்தும் அதன் பின்னணியையும் விளக்கியுள்ளார். அதன்படி, "ரஜினி சாருக்கு சூப்பர் ஸ்டார்னு டைட்டில் நிலைச்சதுக்குக் காரணமே அவர் படங்களோட வசூல்தான். தன்னுடைய படத்தால யாரும் நஷ்டமடைந்து விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் அவர் இருப்பார் எனவும், அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பத்திரிகைக்கு பேட்டிக் கொடுத்துள்ள திருப்பூர் சுப்ரமணியன் இதனைக் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் டைட்டில் விவகாரத்தில் ரஜினிக்கு எதிராகவே பலரும் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், திருப்பூர் சுப்ரமணியம் மட்டுமே ரஜினியை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். அவரது இந்தப் பேட்டியை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











