Rajini - காலை 8 மணிக்கே சரக்குதான்.. ரஜினிக்கு கம்பெனி கொடுத்த நடிகர்.. தலைவர் அலப்பறையை கெளப்பிருக்காரு

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த் காலை 8 மணிக்கே சரக்கு அடித்துவிட்டு தன்னிடம் ஒரு விஷயம் சொன்னதாக ராதாரவி தெரிவித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார், தலைவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் படம் வெளியானது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜெயிலர் மூலம் ஒரு ஹிட் கிடைத்திருக்கிறது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

Rajini told Me something at 8 oclock in Drinks Says Radharavi

சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து: ரஜினிக்கு இப்போது 72 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவரது நடிப்பையும், ஸ்டைலையும் பார்த்து பலரும் ரசிக்கிறார்கள். சமீபத்தில் எழுந்த அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து பேசிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன்கூட, 72 வயதில் ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ணுங்கள் அப்போதுதான் நீங்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை ரஜினிகாந்த்: ரஜினியின் நடிப்பு, ஸ்டைலை மட்டுமின்றி அவரது பேச்சு, இயல்பையும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.குறிப்பாக அடிபட்டு வந்ததால் சூப்பர் ஸ்டார் என்ற புகழ்ச்சியை தன் மண்டைக்குள் அவ ஏற்றிக்கொள்ளவே மாட்டார் என்றும்; பழகுவதற்கு அவ்வளவு எளிமையாக இருப்பார் என்றும் அவருடன் பழகியவர்கள் கூறுவார்கள்.அதேசமயம் ரஜினிகாந்த் இள வயதில் இருந்தபோது பல சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார்.

குடித்த ரஜினி: அதிலும் தான் வளர்ந்துவந்த காலகட்டத்தில் மதுவை அளவுக்கு அதிகமாகவே எடுத்துக்கொண்டார் அவர். அதுமட்டுமின்றி குடித்துவிட்டு விமான நிலையத்தில் சண்டை போட்டதாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. அந்த அளவுக்கு குடித்தவர். ஆனால் இப்போது குடி, சிகரெட் என தனக்கிருந்த கெட்ட பழக்கங்களை சுத்தமாக ஒதுக்கிவிட்டார் அவர்.

ரஜினி செய்த அட்வைஸ்: ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோதுகூட, "தினமும் குடிக்காதீர்கள்.குடிப்பழக்கம் மட்டும் இல்லையென்றால் இப்போது இருக்கும் ரஜினியெல்லாம் சும்மா. இதைவிட நன்றாக இருந்திருப்பேன்" என கூறியிருந்தார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் காலை 8 மணிக்கே குடித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

Rajini told Me something at 8 oclock in Drinks Says Radharavi

8 மணிக்கே குடி: இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய நடிகர் ராதாரவி, "ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக மைசூருக்கு கிளம்பிகொண்டிருந்தேன். காலை 8 மணி இருக்கும் ரஜினி ஃபோன் செய்து வீட்டுக்கு வந்துவிட்டு போக முடியுமா என கேட்டார். நானும் வரேன் சார் என சொல்லிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றேன். போனதும் அப்படியே பேச ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் மது பாட்டிலை ஓபன் செய்தோம்.

டைம்லாம் இல்லைங்க: அப்போது நீங்க குடிக்கிற டைம் எது என்று கேட்டார். எனக்கு டைம் எல்லாம் இல்லைங்க. வேலை இல்லைனா குடிப்பேன். இப்போ எதுவும் வேலை என்றேன். உடனே நாங்கள் இருவரும் மதுவை சாப்பிட ஆரம்பித்தோம். குடித்துக்கொண்டிருக்கும்போது அவர், 'அருணாச்சலம் படத்தில் உங்களைத்தான் வில்லனாக முதலில் போட்டிருந்தோம். இப்போது பி.வாசுவை மாற்றிவிட்டு சுந்தர்.சியை இயக்குநராக கொண்டு வந்திருக்கிறோம். படத்தில் மூன்று வில்லன்கள். அதனால் உங்களை இதிலிருந்து எடுக்க வேண்டிய சூழல்' என்றார்.

எனக்கு கோபம் வந்துவிட்டது. உடன்வே நான் நேரத்தை பார்த்தீங்களா சார் திறமை அதிர்ஷ்டத்தை தேடி வர வேண்டியிருக்கிறது என ரஜினியிடம் சொன்னேன்.முதலில் என்ன சொல்கிறேன் என புரியாத அவர் இன்னொருமுறை கேட்டார். மீண்டும் அதையே சொன்னேன். அதை அவர் ரசித்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X