குடும்பத்துடன் அமெரிக்கா செல்லும் ரஜினி... இந்தமுறை செம பிளான்!
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் மூன்று வார பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
ஒருபக்கம் பட வேலைகள், மறுபக்கம் அரசியல் செயல்பாடுகள் என பரபரப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு காலா, 2.0 ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி அதன் பின் பேட்ட படப்பிடிப்பில் தீவிரமாக கலந்துகொண்டார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. இசை வெளியீட்டு விழாவும் முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பேட்ட திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக அவர் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்.
ஜனவரி 10-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கி, புத்தாண்டு விடுமுறையை அங்கு கொண்டாட உள்ளதாக தெரிகிறது. அதன் பின் சென்னை திரும்பியதும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார்.


Click it and Unblock the Notifications











