யோகி பாபு டீசர்.. குபீரென சிரித்த ரஜினி.. அப்ப சொன்னாரு பாருங்க அந்த வார்த்தை..!
நடிகர் யோகி பாபுவின் காமெடியை ரஜினியும், விஜய்யும் ரசித்து பாராட்டியுள்ளனர்.
Recommended Video
சென்னை: யோகி பாபுவின் தர்ம பிரபு பட வசனத்தைக் கேட்டு ரஜினியும், விஜய்யும் பாராட்டியுள்ளனர்.
ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்து வரும் யோகி பாபு, தர்ம பிரபு படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், யோகி பாபுவின் இமயத்தின் உயரம் வசனம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த வசனத்தை ரஜினியும், விஜய்யும் ரசித்து சிரித்து, பாராட்டியது தெரிய வந்துள்ளது. தர்பார் பட ஷூட்டிங்கின் போது ரஜினியிடம் இந்த டீசரைக் காட்டினாராம் யோகி பாபு.
டீசரைப் பார்த்து சிரி சிரியென சிரித்த ரஜினி, கூடுதலாக ஒரு விசயம் கூறினாராம். ஆனால், அதனை தற்போது வெளியில் சொல்ல மாட்டாராம் யோகி பாபு. அது சஸ்பென்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.
முத்துகுமரன் இயக்கியுள்ள தர்ம பிரபு படத்தில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். நடிகை ஜனனி ஐயர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். யோகி பாபுவுக்கு அம்மாவாக ரேகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











