Rajini Vijay: "தலீவர், தளபதி ஒற்றுமைகள்..” ஒரே ட்வீட்டில் ரஜினி, விஜய்யை சோலி முடித்த ப்ளூ சட்டை!

சென்னை: யூடியூப் சினிமா விமர்சனம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.

படங்கள் நன்றாக இருந்தால் பாராட்டுவதும், இல்லையென்றால் பங்கமாக ட்ரோல் செய்வதும் ப்ளூ சட்டை மாறனின் வழக்கம்.

அதேபோல், தனிப்பட்ட முறையிலும் திரை நட்சத்திரங்களை கலாய்ப்பதில் பங்கம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினி, விஜய் இருவரது அரசியல் ஆசை குறித்து ஒரே ட்வீட்டில் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது.

Rajini Vijay: Blue Sattai Maran Troll Rajini, Vijays Political Entry

ரஜினி, விஜய்யை சோலி முடித்த ப்ளூ சட்டை மாறன்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த ஜெயிலர், தலைவருக்கும் தரமான கம்பேக் படமாக அமைந்தது. இதனையடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அதேபோல், விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.

இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் 550 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்து மாஸ் காட்டியது. இதனிடையே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காகம், பருந்து கதை சொன்னதோடு, தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றியும் அதிரடியாக பேசியிருந்தார் ரஜினி. விஜய்யை கார்னர் செய்து தான் ரஜினி இப்படியாக பேசியதாக சொல்லப்பட்டது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும்விதமாக லியோ சக்சஸ் மீட்டில் பேசியிருந்தார் விஜய்.

இப்படி ரஜினி - விஜய் இடையேயான மோதல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் ரஜினி பாணியில் விஜய்யும் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தையும் களமிறக்கியுள்ளார். இதனால், விஜய் உறுதியாக அரசியலில் அடியெடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினி, விஜய் இருவரையும் ஒரே டிவிட்டில் சோலி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

"தலீவர், தளபதி ஒற்றுமைகள்" என கேப்ஷன் கொடுத்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், பெரிய லிஸ்ட் போட்டு கலாய்த்துள்ளார். அதன்படி,

“தலீவர், தளபதி. ஒற்றுமைகள்:
* பெயர்கள் மூன்றெழுத்து.
* பட்டங்கள் நான்கெழுத்து (தலீவர், தளபதி)
* சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு மோதுவது.
* அவர் நடித்த படம் தளபதி. இவரது பட்டப்பெயர் தளபதி.
* முருகதாஸ், நெல்சன், லோகேஷ் படங்களில் நடிப்பது.
* டோப்பா வைத்து நடிப்பது.
* இண்ட்ரோ பாடலில் இளைஞர்களுக்கு பூமர்தனமாக புத்தி சொல்வது. அதே பாடலில் அரசியலுக்கு வரப்போவதாக காமடி செய்வது.
* ப்ளாக் டிக்கட், கட் அவுட் பாலாபிஷேகம் பற்றி பதில் சொல்லாமல் கள்ள மௌனம் காப்பது.
* மேடைகளில் க்ரிஞ்சான குட்டிக்கதைகள் சொல்வது.
* மேடைகளில்..தொகுப்பாளர் 'அரசியலுக்கு வருவீங்களா?' என ஸ்க்ரிப்டில் எழுதி வைத்ததை கேட்பது. 'வருவேன், வரமாட்டேன்' என பளிச்சென பதில் சொல்லாமல் ஈயம் பூசுவது.
* 'சீக்கிரம் அரசியலுக்கு வாங்க. மக்கள் ரொம்ப எதிர்பார்க்கறாங்க சார்' என அல்லக்கை நடிகர்கள் அல்லது இயக்குநர்களை மேடையில் பேச சொல்வது.
* ஒரு காலத்தில் இவர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குநர்களுக்கு தற்போது வாய்ப்பு தராமல் கழட்டி விடுவது.
* மேடையில் இயல்பாக பேசாமல்.. நான்கு நாட்கள்.. ஸ்க்ரிப்டை மாங்கு மாங்கென்று மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசுவது.
* எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக போட்டால் நம்மை விட பயங்கரமாக ஸ்கோர் செய்து விடுவார். படம் ஓடினால் அவரால்தான் ஓடியது என பேசுவார்கள் என பயந்து அவரை தங்கள் படங்களில் வில்லனாக நடிக்க விடாதது.
* எல்லா போஸ்டர்களிலும் சிகரெட், ரத்தம், கத்தி அல்லது துப்பாக்கியுடன் முகத்தை விரைப்பாக வைத்து கொள்வது.
* மீடியாவை பார்த்தால் தலை சுற்றுவது. ப்ரெஸ் மீட் தராமல் காலத்தை ஓட்டுவது.
* களப்பணியே செய்யாமல், கொள்கை எதுவும் இல்லாமல் அரசியல் வருகை, கட்சி, சி.எம் என வெத்து பில்ட் அப் மட்டும் தருவது.
* அடிக்கடி மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு.. அரசியலுக்கு வரப்போவது போல சீன் போடுவது.
* படத்திற்கும், கருப்பு பணத்திற்கும் பிரச்னை வந்தால்.. தமிழக மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் வரை.. காலில் விழுவது.
* மக்களாகிய நீங்கள் அல்லது ஆண்டவன் சொன்னால் அரசியலுக்கு வருவேன் என பழியை அவர்கள் மேல் போடுவது. ரெண்டு தரப்புலயும் அப்படி சொல்லப்போறதே இல்லை. அதுதான் உண்மை” என பங்கம் செய்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு ரஜினி, விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. இதனால், அவரை ஒருமையில் தகாத வார்த்தைகளாலும் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X