Rajini: விஜய் எப்பவும் ரஜினி சார்ன்னு சொன்னது இல்ல... ‘அப்படித்தான்’ கூப்பிடுவார்: ஜெயிலர் பிரபலம்
சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையானது.
நடிகர் விஜய்யை அட்டாக் செய்வதற்காக தான் 'காகம் - பருந்து' என ரஜினி குட்டி ஸ்டோரி சொன்னதாகவும் கூறப்பட்டது.

இதற்கு விஜய்யின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், ஜெயிலர் கலை இயக்குநர் கிரண், ரஜினி குறித்து விஜய் என்ன சொன்னார் என்பதை வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினியை விஜய் அப்படித்தான் கூப்பிடுவார்: சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர், வரும் 10ம் தேதி வெளியாகிறது. இன்னும் மூன்றே நாட்கள் மட்டுமே உள்ளதால் ஜெயிலர் அட்வான்ஸ் புக்கிங் வேகமெடுத்துள்ளது. ஜெயிலர் படத்தை முதல் நாளிலேயே எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார். இந்த டைட்டிலை தான் எப்போதோ வேண்டாம் என சொல்லிவிட்டேன், ஆனாலும் அது என்னவிட்டு போகவில்லை. அதேநேரம் சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றி நான் பயந்ததே கிடையாது எனக் கூறியிருந்தார். இதோடு இல்லாமல் 'காகம் - பருந்து' என குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார். அதற்கு விஜய் தரப்பில் இருந்து மறுப்புத் தெரிவிக்கவில்லை, அதேபோல் தளபதியின் ரசிகர்களும் இதனை கொண்டாடினர். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும்விதமாக தான் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து கெத்தாக பேசியதாக சொல்லப்பட்டது.
முக்கியமாக விஜய்யை அட்டாக் செய்ய தான் ரஜினி அப்படியெல்லாம் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகின. மேலும், ரஜினி - விஜய் ரசிகர்கள் மாறிமாறி ட்ரோல் செய்துகொண்டனர். இதற்கெல்லாம் லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் குட்டி ஸ்டோரியுடன் பதில் கொடுப்பார் என தளபதி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். மேலும், விஜய்யின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் கலை இயக்குநர் கிரண், ரஜினி குறித்து விஜய் பேசியதை வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதாவது லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, தற்செயலாக விஜய்யை சந்தித்துள்ளார் அவர். அப்போது ஜெயிலர் ஷூட்டிங்கும் நடைபெற்று இருந்ததுடன், ரஜினியும் கொரோனா பாதிப்பு முடிந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தாராம்.
அதனை குறிப்பிட்டு ரஜினியின் நலம் குறித்து விசாரித்துள்ளார் விஜய். "தலைவர் எப்படி இருக்கிறார்... ஜெயிலர் ஷூட்டிங்லாம் எப்படி போகுது" என சாஃப்ட்டாக கேட்டுள்ளார். அதாவது "தலைவர்ன்னு தான் சொன்னாரே தவிர, ரஜினி சார்ன்னு கூட விஜய் சொல்லவில்லை" என கிரண் விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும், "நெல்சன் யாராக இருந்தாலும் கட்டிப் போட்டுடுவான், அதனால அவன் தலைவரை நல்லா பார்த்துக்குவான்" எனவும் விஜய் கூறினாராம். இதனை மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் ஜெயிலர் கலை இயக்குநர் கிரண்.


Click it and Unblock the Notifications











