Rajini Vijay: லியோ லுக்கில் விஜய்... தோளோடு அணைத்துக்கொண்ட ரஜினி... பஞ்சாயத்து ஓவர்ப்பா!
சென்னை: ஜெயிலர் செகண்ட் சிங்கிள் வெளியானதில் இருந்தே ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையே மோதல்போக்கு காணப்படுகிறது.
'Hukum Tiger Ka Hukum' என்ற இந்தப் பாடலில் சில வரிகள் விஜய்யை அட்டாக் செய்வதைப் போல இருப்பதாக சர்ச்சையானது.
இதனால் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோர் மீது ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர்.
இந்நிலையில், லியோ லுக்கில் இருக்கும் விஜய்யை ரஜினி தோளோடு அணைத்துக்கொள்ளும் போட்டோ வைரலாகி வருகிறது.

விஜய்யை தோளோடு அணைத்துக்கொண்ட ரஜினி: கோலிவுட்டின் நிரந்தரமான சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடுவது ரஜினியை மட்டுமே. கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துள்ள ரஜினிக்கு, ரசிகர்களிடம் இன்னும் கிரேஸ் குறையவே இல்லை. இதனால் தான் தற்போது அவர் நடித்துள்ள ஜெயிலர் படத்துக்கு தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதனிடையே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் உட்பட சில தயாரிப்பாளர்கள், சினிமா விநியோகஸ்தர்கள் கூறி வந்தனர். தற்போதைக்கு விஜய்யின் படம் தான் கலெக்ஷனில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகிறது. அதனால் அவர்தான் சூப்பர் ஸ்டார் என கூறி வந்தனர். இதையெல்லாம் சைலண்டாக கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் செகண்ட் சிங்கிளில் சம்பவம் செய்துவிட்டார்.
ஜெயிலர் செகண்ட் சிங்கிளான 'Hukum Tiger Ka Hukum' பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் பாடலில் "பேர தூக்க நாலு பேரு... பட்டத்தை பறிக்க நூறு பேரு" என்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ரஜினிக்காகவே பஞ்ச் வைத்து எழுதப்பட்ட இந்த வரிகள், அவரது ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. அதேநேரம் இந்த வார்த்தைகள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படும் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளதாக சர்ச்சையானது.
ஜெயிலர் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத்தும் இதற்கு காரணம் என அவர்கள் மீதும் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர். அதேநேரம் இதெல்லாம் பிளான் செய்து நடக்கவில்லை, விஜய்யை டார்க்கெட் செய்து இப்பாடல் வரிகள் எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பஞ்சாயத்துக்கு முடிவுகட்டும் விதமாக ஒரு போஸ்டர் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
இந்தப் போஸ்டரில் லியோ லுக்கில் இருக்கும் விஜய்யை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தோளோடு அணைத்துக் கொண்டுள்ளார். இருவருமே மைக்கில் பேசுவது போல் வெளியாகியுள்ள இது, ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன் மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போஸ்டரை ரஜினி, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாமல், ரசிகர்களே இப்படி ஃபேன்மேட் போஸ்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











