Rajini: "லால் சலாம் ஓடணும்னா விஜய் ரசிகர்கள் சப்போர்ட் வேணும்..” ரஜினி ரூட் மாற இதுதான் காரணமா?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீஸாகிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் எனக்கு எந்த பகையும் கிடையாது என ரஜினி கூறியிருந்தார். இதற்கான காரணம் குறித்து பிரபலம் ஒருவர் வெளியிட்ட தகவல் வைரலாகி வருகிறது.

ரஜினிக்கு விஜய் சப்போர்ட் தேவை
ஜெயிலரை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டராக நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

 Rajini Vijay: Rajini praised Vijay for the success of Lal Salaam

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் குறித்து பேசியது தான் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஹைலைட்டாக அமைந்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதை சொன்னது விஜய்யை மனதில் வைத்து கிடயாது என ரஜினி கூறினார். அதேபோல், விஜய்யை நான் போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதை கிடையாது. அதேபோல் விஜய் என்னை போட்டியாக பார்த்தால் அது அவருக்கும் மரியாதை கிடையாது என பேசியிருந்தார்.

அதோடு விஜய்யின் வளர்ச்சியை பற்றியும் அவர் அரசியலில் களமிறங்குவது குறித்தும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். திடீரென விஜய் குறித்து ரஜினி ஓபனாக பேசியது திரையுலகில் மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தது. ரஜினியின் இந்த மாற்றத்துக்கு காரணம் லால் சலாம் படத்துக்கு விஜய் ரசிகர்களால் பிரச்சினை வந்துவிடக் கூடாது என சொல்லப்படுகிறது. காக்கா - கழுகு கதையை சொன்னதில் இருந்தே ரஜினியை விஜய் ரசிகர்கள் டார்கெட் செய்துவிட்டனர்.

ரம்பாவின் த்ரோபேக் பேட்டியை எடுத்து ரஜினிக்கு எதிராக வைரலாக்கியதோடு இன்னும் பல ட்ரோல்கள் பறந்தன. இதனால் லால் சலாம் வெளியாகும் போதும் விஜய் ரசிகர்கள் சம்பவம் செய்துவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும் என ரஜினி யோசிக்கிறாராம். இதன் காரணமாகவே லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி பேசிய ரஜினி, பல இடங்களில் விட்டுக்கொடுக்காமலும் பாராட்டியிருந்தார். இதற்கு விஜய்யின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கப் போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X