Rajini Vijay: "விஜய்க்கு அப்ப 13 வயசு... என் கண்ணெதிரே வளர்ந்த பையன்.." ரஜினி சொன்ன அட்வைஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பிப்.9ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜய் குறித்து சூப்பர் ஸ்டார் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், விஜய்க்கு ரஜினி செய்த அட்வைஸ் ஒன்றும் இப்போது ட்ரெண்டாகியுள்ளது.

விஜய்க்கு ரஜினி அட்வைஸ்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பிப்.9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய லால் சலாம் ரிலீஸ் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் ரோலில் நடித்துள்ள இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோவாக நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பற்றி ரஜினி பேசியது வைரலாகி வருகிறது.

 Rajini Vijay: Rajinis advice to Vijay at the Lal Salaam Audio launch is trending

அதில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதை சொன்னது விஜய்யை மனதில் வைத்து அல்ல என விளக்கம் கொடுத்தார். இந்த கதையை வைத்து எனக்கும் விஜய்க்கும் போட்டி என சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதெல்லாம் அப்படி ஏதும் கிடையாது, அதை பார்த்து எனக்கு வேதனையாக இருந்தது. விஜய்யை நான் போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதை கிடையாது. அதேபோல் விஜய் என்னை போட்டியாக பார்த்தால் அது அவருக்கும் மரியாதை கிடையாது என பஞ்ச் வைத்தார்.

முக்கியமாக விஜய்யின் வளர்ச்சியை பார்த்து எனக்கு சந்தோஷமே எனக் கூறிய ரஜினி, அவருக்கு அட்வைஸ் செய்தது குறித்தும் பேசினார். அதாவது நான் நடித்த தர்மத்தின் தலைவன் பட ஷூட்டிங் விஜய் வீட்டில் தான் நடந்தது. அப்போ விஜய்க்கு 13 வயது இருக்கும், அவருக்கு நடிக்க விருப்பம் இருப்பதாக அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் என்னிடம் கூறினார். உடனே நான் முதலில் படிப்புல கவனம் செலுத்துங்க... அப்புறம் நடிக்கலாம் என் அட்வைஸ் செய்தேன்.

அதன்பின்னர் அவராக கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்துள்ளார். இப்போது விஜய் அரசியலுக்கும் வரவுள்ளார் என ரஜினி பேசியது ரசிகர்களையும் கவனம் ஈர்த்துள்ளது. லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஒருவழியாக ரஜினி எல்லாத்துக்கும் சேர்த்து முடிவு கட்டியுள்ளார். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசினார். அப்போது சமூக வலைத்தளங்களில் தொடங்கிய ரஜினி - விஜய் மோதல் அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுத்தது.

விஜய்யும் லியோ இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி சொன்னது ரஜினியை அட்டாக் செய்ததை போலவே இருந்தது. முக்கியமாக அசோசியேட் டைரக்டர் ரத்னகுமார் லியோ மேடையில் சொன்ன கழுகு கதை இன்னும் விஸ்வரூபம் எடுத்தது. இது எல்லாவற்றுக்கும் சேர்த்து தற்போது லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி முடிவு கட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X