»   »  'ஒரு வார்த்தை' சொன்ன ஷங்கர்: அப்படியே கேட்டு நடந்த ரஜினி, விஜய்

'ஒரு வார்த்தை' சொன்ன ஷங்கர்: அப்படியே கேட்டு நடந்த ரஜினி, விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்தபோதும் விஜய் புகைப்படம் எதுவும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் இயக்குனர் ஷங்கர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கரின் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய படப்பிடிப்பு எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அங்கு தான் விஜய்யின் பைரவா படத்தின் பேட்ச் வொர்க்கிற்கு திட்டமிடப்பட்டது.


பைரவா படப்பிடிப்பை முடித்த விஜய் பிலிம்சிட்டியில் ரஜினி இருப்பதை தெரிந்து கொண்டார்.


ரஜினி

ரஜினி

பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பு முடிந்த கையோடு விஜய் நேராக ரஜினியின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார். விஜய்யை பார்த்த ரஜினிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


விஜய்

விஜய்

விஜய் ரஜினியிடம் 10 நிமிடங்கள் பேசியுள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை. செல்ஃபி காலத்தில் இவர்கள் இருவரும் சந்தித்தும் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை.


சிறப்பு கெட்டப்

சிறப்பு கெட்டப்

விஜய் ரஜினியை சந்தித்தபோது சூப்பர் ஸ்டார் படத்திற்காக சிறப்பு கெட்டப்பில் இருந்தாராம். அந்த கெட்டப் குறித்து யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று ஷங்கர் கறாராக தெரிவித்துவிட்டாராம்.
ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் விஜய்யும், ரஜினியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையாம். விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ள படம் ரஜினியின் அண்ணாமலை படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Vijay met Rajinikanth on the sets of his upcoming movie 2.0 but refrained from taking pictures as per director Shankar's instruction.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil