Rajini VS Ajith: 'ரஜினியை வீழ்த்தியது அஜித் தான்..' நெருப்பை புகையவிட்ட ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியானதில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் ரஜினியை ட்ரோல் செய்து வருகிறார்.

ஜெயிலர் விமர்சனம் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

 Rajini VS Ajith: Blue Sattai Maran criticized Ajith as the one who defeated Rajini

இந்நிலையில் மாமன்னன் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் 'பறக்கும் பன்றி' விருது வழங்கப்பட்டது.

அந்த விருதினை ரஜினிக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், தலைவரை அஜித் ஏற்கனவே வீழ்த்திவிட்டார் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

ரஜினியை வீழ்த்தியது அஜித் தான்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்பிருந்தே ரஜினியை ட்ரோல் செய்து வந்தார் ப்ளூ சட்டை மாறன். அதோடு இல்லாமல் படம் வெளியான பின்னரும் நெகட்டிவாக விமர்சனம் செய்திருந்தார். தொடர்ச்சியாக ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்தும் ட்ரோல் மீம்களை பறக்கவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை.

இதற்கெல்லாம் உச்சமாக ரஜினியுடன் மீட்டிங் நடந்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் கூறி அதிரடி காட்டினார். ஆனால், இன்னும் வீடியோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உதயநிதி நடித்த மாமன்னன் படத்தின் 50வது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது.

இதனையடுத்து இப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உதயநிதி, வடிவேலு, ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உட்பட மாமன்னன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவருக்கும் 'பறக்கும் பன்றி' விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், ரஜினிக்கும் இந்த விருதை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது, "சிங்கிள் சிங்கமாக இருப்பதாக நினைக்கும் தலீவருக்கு இந்த 'பறக்கும் பன்றி' விருதினை அளிக்க வேண்டும். இதனால் அவர் கற்கவுள்ள படிப்பினை:

1. சிங்கம் சிங்கிளாக மட்டுமே தியேட்டரில் ரிலீஸ் ஆகும். யாரிடமும் போட்டி போட்டு வெல்லாது. போட்டி போட்டாலும்... விஸ்வாசத்திடம் தோற்ற வரலாறு மீண்டும் தொடரலாம். உண்மையில் சிங்கிள் சிங்கமாக வந்து தலீவரை வீழ்த்தியது தூக்கு துரைதான்.
2. 'பன்னிங்கதான் கூட்டமா வரும்' எனும் மட்டமான எண்ணம் மறையும்.
3. பருந்துக்கு இணையாக பன்றிகளும் உயரத்தை தொடும்" என பட்டியலிட்டுள்ளார்.

அதாவது ஜெயிலர் திரைப்படம் தனியாக ரிலீஸ் ஆனதால் தான் இந்தளவிற்காகவாது வெற்றிப் பெற்றது. ஒருவேளை மற்ற படங்களுடன் போட்டிப் போட்டிருந்தால், ரஜினியின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் மோதி தோற்ற நிலை மீண்டும் வந்திருக்கும் என விமர்சித்துள்ளார். ரஜினியை அஜித் எப்போதோ வீழ்த்திவிட்டார் என்பதாகவும், சூப்பர் ஸ்டாரின் பருந்து - காகம் கதைக்கு பதிலடியாகவும் ப்ளூ சட்டையின் இந்த டிவிட்டர் பதிவு உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X