Rajini VS Ajith: அஜித்துக்கு இணையாக ரஜினியால் வர முடியாது... வரிந்துகட்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியானது முதல் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரஜினியை கொண்டாடி வந்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியின் ஃபேன்பாய் சம்பவம் என ரசிகர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.

இந்நிலையில், உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசி வாங்கியது, ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Rajini VS Ajith: Blue Sattai Maran criticized that Rajini cannot be equal to Ajith

இதுபோன்ற தனிமனித ஒழுக்கத்தில் அஜித்துக்கு இணையான ஹீரோ கிடையாது என ப்ளூ சட்டை மாறன் வரிந்து கட்டி சண்டை செய்து வருகிறார்.

அஜித்துக்கு இணையாக ரஜினியால் வர முடியாது: கடந்த ஒருமாத காலமாகவே ரஜினியின் ஜெயிலர் ஃபீவர் தான் ரசிகர்களை ஆட்டுவித்தது. சூப்பர் ஸ்டார், நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான ஜெயிலர், ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் வாரம் வசூலில் மாஸ் காட்டிய ஜெயிலர், இரண்டாவது வாரத்தில் இருந்து ரொம்பவே தடுமாறி வருகிறது. இதனிடையே உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசி வாங்கியதும் சர்ச்சையானது.

 Rajini VS Ajith: Blue Sattai Maran criticized that Rajini cannot be equal to Ajith

உபி சென்றுள்ள ரஜினிகாந்த் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்கவிருந்தார். ஆனால், அம்மாநில துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா மட்டுமே ரஜினியுடன் ஜெயிலர் படம் பார்த்தார். அப்போதும் கூட அவர் பாதியிலேயே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ரஜினி இப்படி நடந்துகொண்டது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு எதிரான ட்ரோல்களும் மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தை வைத்து ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை பங்கமாக கலாய்த்து வருகிறார். இதுவரை ஜெயிலர் விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து மட்டுமே ட்ரோல் செய்த ப்ளூ சட்டை, இப்போது ரஜினியை தொடர்ச்சியாக ட்விட் செய்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்துவந்த ரசிகர்கள், அஜித்தின் போட்டோ ஒன்றை வைரலாக்கினர்.

 Rajini VS Ajith: Blue Sattai Maran criticized that Rajini cannot be equal to Ajith

அதாவது, ஒரு சினிமா விழாவின் போது அமிதாப்பச்சன் காலில் விழுந்து அஜித் ஆசி வாங்கிய போட்டோவை ஷேர் செய்து, இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா..? என்பதாக ட்ரோல் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த மீம்ஸ்க்கு ப்ளூ சட்டை மாறனும் பதிலடி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது. அதாவது "அமிதாப் கலைத்துறையில் சீனியர், வயதில் பெரியவர், அஜித்தை வைத்து உல்லாசம் படமெடுத்த தயாரிப்பாளர். அந்த மரியாதைக்கு காலில் விழுந்து வணங்குகிறார்."

"இதப்போயி கபாலி மேட்டரோட மேட்ச் பண்ணாதீங்க. அஜித்தின் படங்கள் பிடிக்காமல் போகலாம். ஆனா தனிமனித ஒழுக்கத்துல அவருக்கு இணையான ஒரு முன்னணி ஸ்டார் இங்க கிடையாது. கருப்பு பணத்தை பதுக்கறவங்களுக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா.. நேர்மையா வரி கட்டுற இவருக்கு எவ்வளவு இருக்கும்.? ஆகவே.. Do not dare to touch Ajith on such issues" என பதிவிட்டுள்ளார். அஜித் குறித்து ப்ளூ சட்டை மாறன் கெத்தாக பதிவிட்டுள்ள இந்த டிவிட்டை, தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X