Rajini VS Ajith: ”அஜித்துக்காக ப்ரொமோஷன் பண்ண ரஜினி..” இந்த ரகசியம் தெரியுமா..? ட்ரெண்டாகும் போட்டோ
சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி ப்ரோமோஷன் செய்த சம்பவம் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளது. அஜித்துடன் ரஜினி இருக்கும் போட்டோவை இருதரப்பு ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
அஜித்துக்காக ப்ரொமோஷன் செய்த ரஜினி
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியும் வேட்டையன் படத்தில் பிஸியாக காணப்படுகிறார். தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் விடாமுயற்சி அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மே 1ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அஜித்தும் ஒன்றாக இருக்கும் போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது அஜித்துக்காக ரஜினி ப்ரொமோஷன் செய்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடிப்பில் சரண் இயக்கிய திரைப்படம் அசல். காதல் மன்னன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சரண், அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவர்.
காதல் மன்னன், அமர்க்களம் என அதகளப்படுத்திய இந்தக் கூட்டணி அசல் படத்தில் மீண்டும் இணைந்தது. இந்தப் படத்தை நடிகர் பிரபு தங்களது சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தார். ரஜினியின் சந்திரமுகி படம் கொடுத்த லாபத்தால் உற்சாகமான பிரபு, அஜித் நடித்த அசல் படத்தையும் தயாரித்தார். அஜித் - சரண் கூட்டணியில் உருவான அசல் படத்தின் பூஜை விழா பிரம்மாண்டமாக நடந்தது.
அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருமாண்டி ஸ்டைல் மீசையுடன் அஜித்தும், மீசையே இல்லாமல் அஜித்தும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டது அப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் அசல் படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த். இதனால் அசல் படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஆனால், ஏகப்பட்ட ஹைப் உடன் வெளியான அசல் படுதோல்வி அடைந்தது. அஜித் கேரியரில் மிக மோசமான தோல்வியை தழுவிய படங்களில் அசலும் இணைந்தது. இந்நிலையில், அசல் படத்தின் பூஜை விழாவில் ரஜினியும் அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அஜித்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியே ப்ரொமோஷனில் களமிறங்கியது இப்போதும் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











