Rajini Vs Vijay: ரஜினி முன்னால் பவ்யமாக கை கட்டி நிற்கும் விஜய்... திடீரென ட்ரெண்டாகும் போட்டோ
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.
ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளலாம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் விஜய் இருக்கும் போட்டோ டிவிட்டரில் திடீரென ட்ரெண்டாகி வருகிறது.

ரஜினி முன்னால் கை கட்டி நிற்கும் விஜய்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் தாறுமாறாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், வரும் 17ம் தேதி இரண்டாவது பாடலும் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து இம்மாதம் இறுதியில் ஜெயிலர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகின. இதற்காக சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனாலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்வது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதனிடையே கோலிவுட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து கடந்த சில வருடங்களாக பரபரப்பான கன்டென்ட்டாக வலம் வருகிறது. வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசி வம்பில் மாட்டினார் சரத்குமார். இதனால் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சண்டைப் போட்டுக் கொண்டனர்.
அதேபோல், இன்னொரு பக்கம் மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சரிதா, சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி எனக் கூறி அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை தொடங்கி வைத்தார். ஆனால், யார் என்ன சொன்னாலும் நான் தான் ஆல்டைம் சூப்பர் ஸ்டார் என ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்து நிரூபிக்க உள்ளார் ரஜினிகாந்த். அதேபோல் அக்டோபரில் வெளியாகவுள்ள லியோ திரைப்படமும் விஜய்க்கு சூப்பர் ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுக்கும் விதமாக ஒரு போட்டோ திடீரென வைரலாகி வருகிறது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பு விஜய் பவ்யமாக கை கட்டி நிற்கிறார். அதாவது எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ரஜினி கை குலுக்கியபடி பேசிக் கொண்டிருக்க, அவர்கள் அருகே விஜய் அமைதியாக சிரித்துக்கொண்டே நிற்கின்றார். இந்தப் போட்டோ சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த போட்டோவை ரஜினி ரசிகர்கள் திடீரென ட்ரெண்ட் செய்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











