Rajini Vs Vijay: ரஜினியுடன் மோதி பார்க்க துணிந்த விஜய்... 2024 தீபாவளி ரேஸில் தலைவர் 171-தளபதி 68?
சென்னை: கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் லியோ அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இன்னொரு பக்கம் ரஜினி - விஜய் இடையே சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்தும் காரசாரமாக சென்றுக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ரஜினியுடன் நேரடியாக மோதிப் பார்க்கும் முடிவில் விஜய் ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ரஜினியுடன் மோதிப் பார்க்கும் விஜய்?: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியிருந்தார். அதற்கு விஜய் ஏதும் மறுப்புத் தெரிவிக்காத நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல், காகம் - கழுகு என குட்டி ஸ்டோரியும் கூறி ஹைப் கொடுத்தார்.
இன்னொரு பக்கம் ஜெயிலர் படத்தின் பாடல்களிலும் வெரைட்டியான பஞ்ச் டயலாக் வைத்து மாஸ் காட்டியிருந்தார். இதெல்லாம் விஜய்க்கு எதிரான ரஜினியின் மூவ் தான் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தன. அதேபோல், ஜெயிலர் சக்சஸையும் படக்குழு வெறித்தனமாக கொண்டாடியது. இதனால் விஜய்யின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
லியோவை தொடர்ந்து தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். அதன்படி தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 171, லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 171 படங்களில் ரஜினி கமிட்டாகியுள்ளார்.
இதில், தலைவர் 170 சம்மர் ஸ்பெஷலாக வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171, 2024 தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதே தேதியில் விஜய்யும் தனது தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்திட பிளான் செய்துள்ளாராம். ஜெயிலர் படத்தை தனியாக களமிறக்கி பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டினார் ரஜினி.
அதனால், தலைவர் 171 படத்துக்குப் போட்டியாக தளபதி 68-ஐ ரிலீஸ் செய்தால், அது செம்ம கெத்தாக இருக்கும் என விஜய் தரப்பு யோசித்து வருகிறதாம். அதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் யார் கிங் என்பதையும் நிரூபித்துவிடலாம் என தளபதி & டீம் ஆலோசனை செய்துள்ளதாம். ஒருவேளை அப்படி ரஜினியின் தலைவர் 171 படமும், விஜய்யின் தளபதி 68ம் 2024 தீபாவளிக்கு ரிலீஸானால், அது தெறிமாஸ்ஸாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











