Rajini VS Vijay: ஒரே ஸ்பாட்டில் தலைவர் 170 VS தளபதி 68... ரஜினிக்காக இடத்தை மாற்றிய விஜய்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

அதேபோல், விஜய்யின் தளபதி 68 படப்பிடிப்பும் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

Rajini VS Vijay: Vijay changed Thalapathy 68 shooting spot for Rajinis Thalaivar 170

இந்நிலையில், தலைவர் 170, தளபதி 68 என இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரே ஸ்பாட்டில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், அதனை விரும்பாத விஜய், உடனடியாக தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ரஜினிக்காக இடத்தை மாற்றிய விஜய்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், தளபதி விஜய்யின் லியோ இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெளியாகின. இதனால் இருதரப்பு ரசிகர்களிடமும் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார் என்ற போட்டி எழுந்தது. முன்னதாக ஏற்கனவே சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்தும் கோலிவுட்டை பரபரப்பாக்கியது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார்.

அதற்கு விஜய்யும் எந்த மறுப்பும் சொல்லாமல் இருந்ததை ரஜினி ரசிகர்கள் சர்ச்சையாக்கினர். இதனையடுத்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினியே கன்டெண்ட் கொடுத்தார். அதோடு காக்கா - கழுகு என குட்டி ஸ்டோரி சொல்லி, சைலண்டாக விஜய்க்கு பஞ்ச் வைத்தார். அதுமட்டும் இல்லாமல் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதனால் விஜய்யின் லியோ ரிலீஸாகும் போது, தளபதியின் ரசிகர்கள் தெறிமாஸ் காட்டினர். அதன்பின்னர் நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்டில் விஜய்யே நேரடியாக இறங்கி அடித்தார். அதேபோல், காக்கா கழுகு கதைக்கு அசோஷியேட் டைரக்டர் ரத்னகுமார் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். இப்படியாக சூப்பர் ஸ்டாரும் தளபதியும் மாறி மாறி மாஸ் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் தொடங்கி பின்னர் தாய்லாந்து வரை சென்றது. தற்போது மீண்டும் சென்னை திரும்பிய படக்குழு, பிரசாந்த் ஸ்டுடியோவில் தளபதி 68 படப்பிடிப்பை நடத்தவிருந்தனர். ஆனால், அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படப்பிடிப்பும் பிரசாந்த் ஸ்டுடியோவில் நடக்கவிருப்பதாக விஜய்க்கு தகவல் சென்றுள்ளது. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நாட்களில் நடக்கவிருந்ததாம்.

இதனால் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்த விஜய், தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட்டை உடனடியாக மாற்றிவிட்டாராம். அதன்படி, பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற வேண்டிய தளபதி 68 ஷூட்டிங், ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாம். ஒரே இடத்தில் ஷூட்டிங் இருந்தால், சூப்பர் ஸ்டாரை சந்திக்க வேண்டியது இருக்கும் என விஜய் இப்படி முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X