'பேட்ட பராக்.... திரும்பவும் முதல்ல இருந்து’... வைரலாகும் ரஜினி வீடியோ!

ரஜினி நடைபயிற்சி செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

Recommended Video

அதிகாலையில் போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி செய்த ரஜினி வீடியோ

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சென்னை தெருக்களில் அதிகாலையில் நடைபயிற்சி செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு பயந்து பெரும்பாலும் பிரபலங்கள் பொது இடங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதில்லை. அந்தவகையில் நடிகர் ரஜினியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அதிகாலையில் நடைபயிற்சி செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

ஆனால், அப்போது எளிதாக அவரை அணுக முடியும் என்பதைத் தெரிந்து கொண்ட ஊடகங்கள், தங்கள் செய்தியாளர்களை அனுப்பி அவரிடம் பேட்டி எடுக்க வைத்தன. இதனால் தினமும் ஏதாவது ஒரு ஊடகத்திடம் அவர் மாட்டிக் கொண்டு, தப்பி வர சிரமப்பட்டார் ரஜினி. ஒரு கட்டத்திற்கு மேல், நடைபயிற்சி செய்வதையே அவர் நிறுத்திக் கொண்டார்.

அதிகாலை நடைபயிற்சி

அதிகாலை நடைபயிற்சி

இந்நிலையில், அதிகாலையில் காதுகளில் பனி புகாதவாறு ஹெட்போன் அணிந்து, தலையில் தொப்பி அணிந்து வேகவேகமாக நடைபயிற்சி செய்பவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. தெளிவாக இல்லாத அந்த வீடியோவில் இருப்பது ரஜினி தான் என்கிறார்கள்.

சென்னை பனி

சென்னை பனி

ஏற்கனவே சென்னையில் பனி அதிகமாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் பயந்து மீண்டும் அதிகாலையில் ரஜினி நடைபயிற்சியைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாறுவேடத்தில் ரஜினி

மாறுவேடத்தில் ரஜினி

இங்கு மட்டுமல்ல வெளியூர் பயணங்களின்போதும், ரஜினி ரசிகர்களுக்கு பயந்து இது போன்று தன் அடையாளம் தெரியாதவாறு மாறு வேடத்தில் வெளியில் செல்வதுண்டு. தற்போதும் அதேபோன்று மாறுவேடத்தில் அவர் நடைபயிற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிகிறது.

நடையே காட்டிக்கொடுத்துவிடுகிறது

நடையே காட்டிக்கொடுத்துவிடுகிறது

ஆனால் அவரது நடையே காட்டிக்கொடுத்துவிடுகிறது அது ரஜினி என்று. இந்த வீடியோவையும் அவரது ரசிகர் யாரோ தான் அதிகாலை விழித்திருந்து, காந்திருந்து, தன் வீட்டில் மறைந்திருந்து எடுத்திருக்க வேண்டும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X