»   »  'ஃபார் த லவ் ஆப் எ மேன்' படம் பார்க்கிறார் ரஜினிகாந்த்!

'ஃபார் த லவ் ஆப் எ மேன்' படம் பார்க்கிறார் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி மீது அவரது ரசிகர்கள் எத்தனை அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்ட ரிங்கு கல்சி என்ற நெதர்லாந்து பெண் இயக்குநர் எடுத்த ஃபார் த லவ் ஆப் எ மேன் படத்தை ரஜினிக்கு திரையிட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளனர்.

90 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டாகுமென்டரி படத்தை எடுக்க நான்கு ஆண்டுகள் இந்தியாவிலேயே தங்கியிருந்தார் ரிங்கு கல்சி. இதற்காக தான் பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டார்.

Rajini to watch 'For The Love Of A Man'

இந்தியா முழுவதும், ஜப்பான் போன்ற சர்வதேச நாடுகளிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவர் மீது எத்தனை பக்தியும் அன்பும் வைத்துள்ளனர், அவர் படங்களை எப்படிக் கொண்டாடுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளார்.

சமீபத்தில் பெர்லினில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

அடுத்து மும்பையில் நடக்கும் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது.

இந்தப் படத்தை ரஜினி பார்த்தாரா என்று ரிங்குவிடம் கேட்டபோது, "இன்னும் பார்க்கவில்லை. ஆனால் விரைவில் பார்க்கவிருக்கிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா தனுஷைச் சந்தித்தேன். அவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறினார்," என்றார்.

English summary
Actor Rajinikanth may soon watch the critically-acclaimed documentary “For the Love of a Man” about the superstar’s phenomenon and his fandom.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil