பரபரக்கும் ஜெயிலர் ஷூட்டிங்.. மங்களூருவுக்கு பறந்த ரஜினிகாந்த்

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த மங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயகக்த்தில் வெளியான தர்பார், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியான அண்ணாத்த ஆகிய படங்கள் கொடுத்த தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ரஜினிக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது. இதனையடுத்து இளம் இயக்குநருடன் இணைய முடிவெடுத்த அவர் நெல்சனுடன் கைகோர்த்திருக்கிறார்.

கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமார்.

கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமார்.

கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் சிவாகர்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் மூலம் பிரபலமான இயக்குநர் ஆனார். அந்தப் அப்டம் 100 கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற டார்க் காமெடி வெகுவாக ரசிக்க வைத்தது.

பீஸ்ட்டால் நெல்ச்ன் சந்தித்த சோதனை

பீஸ்ட்டால் நெல்ச்ன் சந்தித்த சோதனை

டாக்டர் பெற்ற மெகா வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த பீஸ்ட் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து நெல்சன் திலீப்குமாரை பலரும் விமர்சனம் செய்தனர். மேலும், படத்தில் கதை என்ற ஒன்றே இல்லை. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநரின் படமா இது என வெளிப்படையாகவே பேசினர். பலரும் நெல்சனை கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர்.

ரஜினியுடன் இணைந்த நெல்சன் திலீப்குமார்

ரஜினியுடன் இணைந்த நெல்சன் திலீப்குமார்

பீஸ்ட் படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் பீஸ்ட் படுதோல்வியடைந்ததால் ரஜினி படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பறந்தன.

ஆனால் அந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியானது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மும்முரமாக நடந்துவரும் ஷூட்டிங்; பறந்துபோன ரஜினிகாந்த்

மும்முரமாக நடந்துவரும் ஷூட்டிங்; பறந்துபோன ரஜினிகாந்த்

படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. இதனையடுத்து ஷூட்டிங்கிற்கு சிறிது பிரேக் எடுத்துக்கொண்ட ரஜினி அடுத்ததாக கடந்த வாரம் ஜெய்சல்மாரில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அதில் அவருடன் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு நடித்தனர்.

இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் மங்களூருவில் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றார். ரஜினிகாந்த் விமான நிலையத்திற்குள் செல்லும் காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X