ரஜினி அரசியலில் தெளிவாக இருக்கிறாராம், சாதிப்பாராம்: சொல்கிறார் நடிகை சுமலதா
பெங்களூர்: ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் சாதிப்பார் என்று நடிகை சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட நடிகை சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றார். தனக்கு ஆதரவு அளித்த பாஜகவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசியல் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் பேசினார்.
சுமலதா ரஜினி பற்றி கூறியதாவது,
ரஜினிகாந்தை எனக்கு நன்றாக தெரியும். அவர் தமிழக அரசியலை தெளிவாக புரிந்து வைத்துள்ளார். அரசியல் பற்றிய தெளிவான சிந்தனை ரஜினியிடம் உள்ளது. அவர் மட்டும் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் சாதிப்பார். கமல் ஹாஸனும் நிச்சயம் சாதிப்பார் என்றார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால் அதுவரை தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











