போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள்...வெளியே வந்து வாழ்த்து சொன்ன ரஜினி
சென்னை : புத்தாண்டை முன்னிட்டு தன்னை பார்த்து வாழ்த்து கூறுவதற்காக போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார் நடிகர் ரஜினிகாந்த்.
Recommended Video
சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் என சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பிராண்டாக தன்னை உருவாக்கிக் கொண்டவர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டு கால திரையுலக பயணத்தில் பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.

ட்விட்டரில் வாழ்த்து
இன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ட்விட்டரில், அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என வாழ்த்து பதிவிட்டிருந்தார் ரஜினி. இந்நிலையில் ரஜினியை நேரில் பார்த்து புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றனர்.

வீடு முன் கூடிய ரசிகர்கள்
தனக்காக காத்திருந்த ரசிகர்களை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி, கேட் அருகில் நின்று கைகளை அசைத்தும், கையெடுத்து கும்பிட்டும் புத்தாண்டு வாழ்த்து சொன்னார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினி மீடியாக்களை சந்திக்கவில்லை.

தலைவா...தெய்வமே...
ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள், தலைவா...தெய்வமே...ஹேப்பி நியூ இயர் என கூச்சிலிட்டனர். அவர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்து விட்டு, சிறிது நேரம் நின்ற ரஜினி, மீண்டும் வீட்டிற்குள் சென்று விட்டார். புத்தாண்டு வாழ்த்து சொல்லி, ரசிகர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓய்வில் ரஜினிகாந்த்
உடல்நிலை பாதிப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி, சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்டு, மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்த படத்திற்காக ரஜினி கதை கேட்டு வருவதாகவும், டைரக்டர் யார் என்பது முடிவானதும் தலைவர் 176 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











