Rajini: "ரஜினி நடிக்கிறத மட்டும் பாருங்க... காலில் விழுந்தா என்ன..?”: வம்பிழுக்கும் YG மகேந்திரன்!
சென்னை: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
இதனிடையே உபி சென்றிருந்த ரஜினிகாந்த், அம்மாநில முதலமைச்சர் யோகியின் கால்களில் விழுந்து வணங்கினார்.
இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் ரஜினிக்கு ஆதரவாக காட்டமாக பதிலளித்துள்ளார்.

ரஜினி யோகி காலில் விழுந்தால் என்ன பிரச்சினை: அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பின்னர் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலருக்கு முதல் வாரம் தரமான ஓபனிங் கிடைத்தது. இதனால், முதல் வாரம் 375 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து ஜெயிலர் வசூல் மிகவும் மோசமானதாக சொல்லப்படுகிறது.
இரண்டு வாரங்களில் மொத்தமே 550 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது ஜெயிலர். உபி சென்றிருந்த ரஜினிகாந்த் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார். அதன்பின்னர் ராமர் கோயில் சென்றும் வழிபட்டு வந்தார் ரஜினி. இந்தச் சம்பவங்கள் சர்ச்சையானதால் தான் ஜெயிலர் படத்தின் இரண்டாவது வாரம் வசூல் குறைந்ததாகக் கூறப்படுகிறது. ஆகமொத்தம் இதுவரை 550 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
ரஜினியின் உபி பயணம் அங்கு நடந்த சம்பங்களை பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் விமர்சித்து வந்தனர். அதேநேரம் அவருக்கு ஆதரவாகவும், இது ரஜினியின் தனிப்பட்ட விருப்பம் அதை அப்படியே விட்டுவிடலாம் எனவும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரஜினியின் சகலையும் நடிகருமான ஒய்ஜி மகேந்திரன் சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார். ரஜினி யோகியின் கால்களில் விழுந்ததில் என்ன தவறு இருக்கு என்பதாக அவர் பேசியுள்ளார்.
அதாவது, "யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுவதையா ஜெயிலர் படத்தில் காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படம் நன்றாக இருந்ததால் வெற்றிகரமாக ஓடுகிறது, இல்லையென்றால் ஓடியிருக்காது. படம் ஹிட் ஆகிறதா என பார்த்தாலே போதும் தான். ரஜினி யோகியின் காலில் விழுவதை ஏன் இப்படி சர்ச்சையாக்க வேண்டும்" என ஒய்ஜி மகேந்திரன் காட்டமாக கூறியுள்ளார்.
ஒய்ஜி மகேந்திரனின் இந்த பேட்டியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஜெயிலர் வெளியாகும் முன்பே ரஜினி யோகியின் கால்களில் விழுந்திருந்தால் படம் ஹிட் ஆகிருக்காது என பதிலடி கொடுத்துள்ளனர். அதேபோல், ரஜினி தனது படங்கள் வெளியாகும் முன்னர் தமிழ்நாடு, தமிழ் மக்கள் என உருட்டுவதும், ரிலீஸாகி ஹிட்டானதும் அப்படியே மாறிவிடுவார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











