twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.பியும் ரஜினி ஸ்டைலும் நான் செய்த ஸ்டைல்கள் எல்லாம் இயக்குனர் கே.பாலச்சந்தர் கற்றுக் கொடுத்தது. எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த குருஅவர்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பொய். இது பாலச்சந்தரின் 101வது படம்கூட. பொய் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் முதல் கேசட்டை வெளியிட அதை ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அப்போது ரஜினி பேசுகையில், எனது முதல் குருவும் கே.பி.சார்தான், முதல் ரசிகரும் அவர்தான். எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்.சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் பிடிப்பது போன்ற ஸ்டைல்களை சொல்லிக் கொடுத்ததும் அவர்தான். இப்படிச் செய்,ஜனங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னவர் அவர்.என்னை வாழ வைத்த தெய்வம் கே.பி.சார். தொழிலை மட்டும் எனக்கு அவர் கற்றுக் கொடுக்கவில்லை.கஷ்டப்பட்டபோதெல்லாம் முன்னால் வந்து நின்றார். கஷ்டங்களைப் போக்கினார். ஆனால் அவருக்கு துன்பம் வந்தபோது நான்முன்னால் நிற்கவில்லை. அதற்காக இப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். பணம் வருவதாக இருந்தால்கூட அதை விரும்பாமல், தனக்கு இஷ்டப்பட்டதைத்தான் செய்வார் பாலச்சந்தர் சார். இப்போதுபோல இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு அவர் இயக்குனராக திகழ்ந்து, இன்னும் பலரை திரையுலகில் அறிமுகப்படுத்தவேண்டும் என்றார் ரஜினிகாந்த்.கமல்ஹாசன் பேசுகையில், பாலச்சந்தரை நான் முதன் முதலாகப் பார்த்தது, மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின்போதுதான். எனதுசகோதரிதான் அந்த நாடகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, இவர்தான் பாலச்சந்தர் என்று ஒரு ஓரமாக நின்று காட்டினார்.அந்த சந்திரன் எனது வாழ்க்கையில் ஒளிவீசச் செய்யும் என்று நான் அப்போது நினைக்கவில்லை. பாலச்சந்தர் செய்தது போலதமிழ்த் திரையுலகில் யாரும் சாதனை செய்ததில்லை. அப்போதெல்லாம் புது நடிகர்கள், குறிப்பாக பாலச்சந்தர் அறிமுகப்படுத்தும்நடிகர்களைப் பார்த்து நான் பயப்படுவேன். எங்கே நாம் காணாமல் போய் விடுவோமோ என்று.வழக்கமாக குருவுக்குத்தான் தட்சணை கொடுக்க வேண்டும். ஆனால் சிஷ்யர்களாகிய எங்களுக்கு தட்சணை கொடுத்தவர் இந்தகுரு. என்றும் மாறாத அவருடைய இளமை மனதை எங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்றார்கமல்.நிகழ்ச்சியில் சிவக்குமார், பிரகாஷ் ராஜ், நாகேஷ், ரமேஷ் அரவிந்த், ஜெயந்தி, கவிஞர் வாலி, இசையமைப்பாளர் வித்யாசாகர்உள்ளிட்ட பலரும் பேசினர்.பொய் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. புத்தக வடிவில்இருந்த அதில், படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்துப் பாடல்களும் பிரசுரிக்கப்பட்டிருந்தன.அத்தோடு பாலச்சந்தரின் முதல் படம் முதல் அனைத்துப் படங்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவர்கள், கமல், ரஜினி,நாகேஷ், ஜெமினி கணேசன் போன்றோருடன் பாலச்சந்தருக்கு இருந்த நட்பு குறித்த தகவல்கள், படங்களும் இடம் பெற்றிருந்தன.

    By Staff
    |

    நான் செய்த ஸ்டைல்கள் எல்லாம் இயக்குனர் கே.பாலச்சந்தர் கற்றுக் கொடுத்தது. எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த குருஅவர்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

    பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பொய். இது பாலச்சந்தரின் 101வது படம்கூட. பொய் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் முதல் கேசட்டை வெளியிட அதை ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

    அப்போது ரஜினி பேசுகையில், எனது முதல் குருவும் கே.பி.சார்தான், முதல் ரசிகரும் அவர்தான். எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்.

    சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் பிடிப்பது போன்ற ஸ்டைல்களை சொல்லிக் கொடுத்ததும் அவர்தான். இப்படிச் செய்,ஜனங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னவர் அவர்.

    என்னை வாழ வைத்த தெய்வம் கே.பி.சார். தொழிலை மட்டும் எனக்கு அவர் கற்றுக் கொடுக்கவில்லை.கஷ்டப்பட்டபோதெல்லாம் முன்னால் வந்து நின்றார். கஷ்டங்களைப் போக்கினார். ஆனால் அவருக்கு துன்பம் வந்தபோது நான்முன்னால் நிற்கவில்லை. அதற்காக இப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.


    பணம் வருவதாக இருந்தால்கூட அதை விரும்பாமல், தனக்கு இஷ்டப்பட்டதைத்தான் செய்வார் பாலச்சந்தர் சார். இப்போதுபோல இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு அவர் இயக்குனராக திகழ்ந்து, இன்னும் பலரை திரையுலகில் அறிமுகப்படுத்தவேண்டும் என்றார் ரஜினிகாந்த்.

    கமல்ஹாசன் பேசுகையில், பாலச்சந்தரை நான் முதன் முதலாகப் பார்த்தது, மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின்போதுதான். எனதுசகோதரிதான் அந்த நாடகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, இவர்தான் பாலச்சந்தர் என்று ஒரு ஓரமாக நின்று காட்டினார்.

    அந்த சந்திரன் எனது வாழ்க்கையில் ஒளிவீசச் செய்யும் என்று நான் அப்போது நினைக்கவில்லை. பாலச்சந்தர் செய்தது போலதமிழ்த் திரையுலகில் யாரும் சாதனை செய்ததில்லை. அப்போதெல்லாம் புது நடிகர்கள், குறிப்பாக பாலச்சந்தர் அறிமுகப்படுத்தும்நடிகர்களைப் பார்த்து நான் பயப்படுவேன். எங்கே நாம் காணாமல் போய் விடுவோமோ என்று.

    வழக்கமாக குருவுக்குத்தான் தட்சணை கொடுக்க வேண்டும். ஆனால் சிஷ்யர்களாகிய எங்களுக்கு தட்சணை கொடுத்தவர் இந்தகுரு. என்றும் மாறாத அவருடைய இளமை மனதை எங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்றார்கமல்.

    நிகழ்ச்சியில் சிவக்குமார், பிரகாஷ் ராஜ், நாகேஷ், ரமேஷ் அரவிந்த், ஜெயந்தி, கவிஞர் வாலி, இசையமைப்பாளர் வித்யாசாகர்உள்ளிட்ட பலரும் பேசினர்.

    பொய் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. புத்தக வடிவில்இருந்த அதில், படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்துப் பாடல்களும் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

    அத்தோடு பாலச்சந்தரின் முதல் படம் முதல் அனைத்துப் படங்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவர்கள், கமல், ரஜினி,நாகேஷ், ஜெமினி கணேசன் போன்றோருடன் பாலச்சந்தருக்கு இருந்த நட்பு குறித்த தகவல்கள், படங்களும் இடம் பெற்றிருந்தன.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X