"தம்": ரஜினிக்கு அன்புமணி பாராட்டு சந்திரமுகி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியை வைக்காததற்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்தியசுகாதார அமைச்சரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், பொது மக்களின் நல்வாழ்வை பேணிக் காக்கும் நோக்கிலும், இந்தியஅரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தாங்கள் அறிவீர்கள்.குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில், புகை பிடித்தல், புகையிலையை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுமுயற்சிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சமீபத்தில் தாங்கள் நடித்து வெளியான சந்திரமுகி படத்தில் புகை பிடித்தல் தொடர்பான காட்சி எதுவுமில்லை என்பதை அறிந்துமகிழ்ச்சி அடைந்தேன்.இதற்காக தங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுதல்கள் என்று கூறியுள்ளார் அன்புமணி.இது பாராட்டா அல்லது கிண்டலா என்று தெரியாமல் ரஜினி தரப்பு குழப்பத்தில் இருப்பதாகக் கேள்வி.

By Staff

சந்திரமுகி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியை வைக்காததற்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்தியசுகாதார அமைச்சரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், பொது மக்களின் நல்வாழ்வை பேணிக் காக்கும் நோக்கிலும், இந்தியஅரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தாங்கள் அறிவீர்கள்.

குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில், புகை பிடித்தல், புகையிலையை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுமுயற்சிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் தாங்கள் நடித்து வெளியான சந்திரமுகி படத்தில் புகை பிடித்தல் தொடர்பான காட்சி எதுவுமில்லை என்பதை அறிந்துமகிழ்ச்சி அடைந்தேன்.

இதற்காக தங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுதல்கள் என்று கூறியுள்ளார் அன்புமணி.

இது பாராட்டா அல்லது கிண்டலா என்று தெரியாமல் ரஜினி தரப்பு குழப்பத்தில் இருப்பதாகக் கேள்வி.

Read more about: anbumani praises rajini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X