»   »  மீண்டும் விவகாரத்தில் அனாமிகா!

மீண்டும் விவகாரத்தில் அனாமிகா!

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படம் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை அள்ளி வருகிறதாம்.

தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான இந்தப் படம் 400 பிரிண்டுகள் போடப்பட்டு ரூ. 30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தவிரடிவி ரைட்ஸ் மூலமாகவும் பல கோடிகளை ஈட்டியுள்ளது சந்திரமுகி. இந்தப் படத்தை தயாரிக்க ஆன செலவு ரூ. 5 கோடி மட்டுமே.

இந் நிலையில் ரஜினியின் முயற்சியையும் மீறி சந்திரமுகியை சன் டிவி வாங்கிவிட்டதாம். படத்தை வாங்க ஜெயா டிவியும் சன் டிவியும்முட்டி மோதின. இதில் ரஜினியின் சாய்ஸ் ஜெயா டிவியாகவே இருந்தது. இதனால் அதற்கே படத்தை விற்க முடிவானது.


ஆனால், யாருமே எதிர்பார்க்காத ஒரு விலையை எடுத்துவிட்டு சிவாஜி பிலிம்ஸை மடக்கிவிட்டது சன் டிவி என்கிறார்கள். விலையைச்சொல்லி ரஜினியிடம் பிரபு பேச, சிவாஜி குடும்பத்துக்கு ரொம்ப காலத்துக்குப் பின் ஒரு படம் மூலம் நல்ல லாபம் கிடைப்பதால், ரஜினியும்ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

இதையடுத்து கடைசி நேரத்தில் சந்திரமுகியை தட்டிப் பறித்துவிட்டது சன். (அதே நேரத்தில் கமலின் மும்பை எக்ஸ்பிரசை ஜெயா டிவிவாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது).

டிவி ரைட்ஸ் மூலம் கிடைத்த பணம் சிவாஜி பிலிம்சுக்கே. அதே நேரத்தில் படத்தை விற்ற வகையிலும், ஆடியோ ரைட்ஸ் வகையிலும் வந்தரூ. 30 கோடி லாபத்தில் பாதி ரஜினிக்காம்.. அதாவது சுமார் ரூ. 15 கோடி. மீதி ராம்குமார்-பிரபு தரப்புக்கு என்கிறார்கள்.

படத்தை வாங்கியவர்களுக்கும் படம் நல்வாழ்வைத் தந்துள்ளதாம். படத்தை வாங்கிய அனைவருக்கும் இப்பேதே போட்ட காசுக்கு மேலாகலாபமும் வந்து சேர்ந்துவிட்டதாம். இனி படம் ஓடும் ஒவ்வொரு நாளும் லாபமே.

2000ம் ஆண்டில் வெளியான படையப்பா தான் ரஜினியின் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த ரெக்கார்ட் படமாக இருந்தது.இப்போது பெரும்பாலான இடங்களில் படையப்பா வசூலையே இந்தப் படம் முறியடித்துவிட்டதாம்.

படத்தின் வெளிநாட்டு உரிமையை ஏபி இன்டர்நேசனல் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இவர்கள் படத்தை 77 பிரிண்டுகள் வாங்கி,மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா, மொரீஷியஸ், ஜப்பான்,இங்கிலாந்து என பல நாடுகளில் வெளியிட்டுள்ளனர்.

படம் இவர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டித் தந்துவிட்டதாம். இதில் நீண்ட நாட்களுக்குப் பின் தென் ஆப்பிரிக்காவுக்குப் போகும் முதல்தமிழ் படம் சந்திரமுகி தான். ரஜினி நடித்த முத்து தான் கடைசியாக அங்கு நேரடியாக ரிலீஸ் ஆன கடைசிப் படம்.

இந்தப் படத்தை பர்தா அணிந்தபடி தியேட்டருக்குச் சென்று இதுவரை 9 முறை கூட்டத்தோடு கூட்டமாக பார்த்துவிட்டு வந்திருக்கிறார்ஜோதிகா. ஒவ்வொரு முறையும் தனக்கு கிடைத்த கைத்தட்டல்களால் ஆனந்தக் கண்ணீர் விட்டுவிட்டு வந்தாராம். ஒரு முறை தனதுஅம்மாவையும் அழைத்துச் சென்றாராம்.

சூர்யா வரலையா?


Read more about: anamika in trouble again

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil