»   »  ரிஷிகேஷ் தமிழ் மாநாட்டில் ரஜினி !

ரிஷிகேஷ் தமிழ் மாநாட்டில் ரஜினி !

Subscribe to Oneindia Tamil

ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் தமிழ் வளர்த்த பக்தி என்ற தலைப்பில் மாநாடுநடைபெற்றது.

இமயமலையில் ரிஷிகேஷில் அமைந்துள்ள தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் ஆசிரமத்தில் தஞ்சாவூர் கலம்பூர் கோவிந்தசாமிஅடிகளார் அறக்கட்டளை, திருப்பனந்தாழ் காசி மடம் ஆகியவை இணைந்து அகில இந்திய அளவில் தமிழ் வளர்த்த பக்தி என்றதலைப்பில் மாநாடு மற்றும் கருத்தரங்கை சமீபத்தில் நடத்தின.

இதில் புராண இதிகாச காலத்திலிருந்து தற்கால சினிமா வரை மக்களிடையே பக்தி எவ்வாறு பரப்பப்பட்டது என்பது பற்றி பலரும்பேசினர். சுவாமி மலை ஸ்தபதி மோகன் ராஜ் எழுதிய சிற்பிகள் வளர்த்த பக்தி என்பது உள்பட சுமார் 350 ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

3 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் நடிகர் ரஜினி காந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதில் தனது ஆன்மிகம், பக்திகுறித்து உரையாற்றிய ரஜினி, பின்னர் தந்த பேட்டி விவரம்:

வட நாட்டில் நீங்கள் எங்கே சென்றாலும் மலையாளியா, தெலுங்கரா, கன்னக்காரரா என்று பார்க்க மாட்டார்கள். அவர்களுக்குதென்னிந்தியர்கள் அனைவரும் மதராஸி தான்- அனைவரையும் அவர்கள் தமிழர்களாகத்தான் பார்ப்பார்கள்.

சினிமாவாகட்டும், அரசியலாகட்டும், தொழிலாகட்டும் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் நம்பர் ஓன் ஆனால் தான் தென்இந்தியாவில் நம்பர் ஒன் ஆக முடியும். அது தான் தமிழ்நாட்டில் சக்தி. தமிழ் ஒரு கடல். ரொம்ப விரிவு, ஆழமானது.

அது மாதிரி என் பக்தியும் ஆழமானது. நான் ரிஷிகேஷத்துக்கு வருவதற்குக் காரணம், இங்கே செல்போன் இல்ல, நியூஸ் பேப்பர்இல்ல, பேசக் கூட ஆள் இல்ல. ஆனா, ஆழமான அமைதி இருக்கு. இந்த அமைதிக்காகத்தான் ஆண்டவன் குடியிருக்கிற இந்தஇடத்துக்கு அடிக்கடி வருகிறேன்.

பாபா படம் சரியாக ஓடவில்லை என்றதும் ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தாடி வைத்துக் கொண்டுவெளியில் வராதீர்கள், வேட்டி கட்டிக்கிட்டு வெளியே வராதே. ஆன்மீகம்னு சொல்லிக் கொண்டு சுத்தாதே. இமயமலைக்குக் கூடரகசியமாக போய்ட்டு வந்துரு.. அப்பத்தான் இமேஜை காப்பத்த முடியும்.. இப்படி ஏகப்பட்ட அட்வைஸ்.

நான் அதையெல்லாம் கேட்டு சிரித்தேன். ஏனென்றால் நான் நானாக இருக்க ஆசேப்படுகிறேன். இப்போ கூட சந்திரமுகி ரிலீஸ்ஆன மூமாவது நாளே ரிஷிகேஸ் போறேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டுத் தான் கிளம்பி வந்தேன். சந்திரமுகி ரொம்ப நல்லாபோவதாக சொல்கிறார்கள்.

இப்ப போய் கேட்டுப் பாருங்க, ரஜினி ரிஷிகேஷ் போறதுல என்ன தப்புன்னு சொல்வாங்க... ஹா..ஹா..ஹா..

நான் இங்கே வர்றது என் பேட்டரியை சார்ஜ் பண்ணிக்கிற தான். ஆண்டவன் தான் என் ஜெனரேட்டர். அவன் தான் என் சக்திக்குமூலம். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil