கோச்சடையானில் ரஜினியின் தங்கையாக நடிக்கும் ருக்மணி ரகசிய திருமணம்

By Mayura Akilan

சென்னை: கோச்சடையான்' படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்கும் ருக்மணி ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம்'படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி. 'ஆனந்த தாண்டவம்' என்ற படத்திலும் நடித்துவிட்டு பரதநாட்டிய பள்ளியில் கவனம் செலுத்தி வந்தார்.

சவுந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்றார். தங்கை வேடம் என்றாலும் செகண்ட் ஹீரோயின் கேரக்டராம் அவருக்கு.

அனிமேசன் படத்தில்

அனிமேசன் படத்தில்

இது பற்றி ருக்மணி கூறும்போது, ‘கோச்சடையான் படத்தில் நான் டான்சராக நடிக்கிறேன். முதன்முறையாக அனிமேஷன் படத்தில் நடித்த அனுபவம் வித்தியாசமானது.

100 மினி கேமரா உடை

100 மினி கேமரா உடை

லண்டனில் உள்ள பைன்வுட்ஸ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தது. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது. 100 மினி கேமராக்கள் பொருத்தப்பட்ட உடைகள் கொடுத்தனர். அதை அணிந்து நடித்த அனுபவம் புதுமையானது.

நடனம் தெரிந்தவள் என்பதால் அதுபோன்ற வேடங்களே வருகிறது. கோச்சடையான் படத்திலும் எனக்கு நடன சீன் அமைத்திருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா..

ரியல் சூப்பர் ஸ்டார்

ரியல் சூப்பர் ஸ்டார்

ரஜினியுடன் ஒரு மணி நேரம் பணியாற்றிய அனுபவத்தில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தகுதியானவர் என்பதை அறிந்தேன்' என்றார்.

திருமணம் முடிந்துவிட்டது

திருமணம் முடிந்துவிட்டது

‘ரோஹன் மோகன் என்பவருடன் எனக்கு திருமணம் முடிந்து விட்டது. என் சொந்த வாழ்க்கைபற்றி அதிகம் பேச விரும்பவில்லை என்கிறார் ருக்மணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X