Rajinikanth: சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் லக்கி சான்ஸ்.. யாரை தேர்ந்தெடுப்பார் லோகேஷ் கனகராஜ்?

சென்னை: சூப்பர்ஸ்டாருடன் தலைவர் 171 படத்தின்மூலம் இணையவுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களை இயக்கி சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களையும் புகழையும் பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Rajinikanth 171 Movie: Check Out 3 Options for Villain Role For Lokesh Kanagaraj

இந்தப் படங்களின் அதிரிபுதிரி வெற்றி மற்றும் வரவேற்பு அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷிற்கு பெற்றுத் தந்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: மாநகரம் என்ற படத்தின்மூலம் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக வங்கியில் பணிபுரிந்துவந்த லோகேஷ் எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரடியாக இயக்குநராக மாறியுள்ளார். முன்னதாக சில குறும்படங்களையும் இயக்கியுள்ள இவர் மாநகரம் படம் மூலம் கவனத்திற்குரிய இயக்குநராக மாறினார். இந்தப் படத்தின் வெற்றி அடுத்ததாக கார்த்தியின் கைதி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

அடுத்தடுத்த படங்கள்: லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது கைதி. வித்தியாசமான கோணத்தில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. கார்த்தியின் கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்த கைதி படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன.

அடுத்தடுத்த வெற்றிகள்: விஜய்யுடன் இணைந்து மாஸ்டர், லியோ என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துள்ளார் லோகேஷ். லியோ படத்திற்கு முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட் படமாக்கினார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் லோகேஷின் லைன் அப்பில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழை பொழிந்துள்ளது.

தலைவர் 171 படம்: இந்நிலையில் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளை தற்போது சென்னையில் இருந்தபடி மேற்கொண்டு வருகிறார். இந்தப்படம் குறித்து தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 171 பட வில்லன்: ரஜினியை வித்தியாசமான கோணத்தில் காட்ட உள்ளதாக முன்னதாக தலைவர் 171 படம் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் லோகேஷ். அவரது படங்களில் எல்லாம் வில்லன் கேரக்டர்கள் மிகவும் பவர்புல்லாக அமைந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினிக்கு யார் வில்லனாவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தையில் லோகேஷ்: இந்நிலையில் தலைவர் 171 படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா, பகத் பாசில் மற்றும் அருண் விஜய் ஆகியோரில் ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களிடம் லோகேஷ் கனகராஜ் தற்போது வில்லன் கேரக்டர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இவர்களில் யார் தலைவர் 171 படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாவார்கள் என்பது குறித்து தெரியவரும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X