எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படமும் கடைசியாக வெளியாகின. இவற்றில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் லால் சலாமோ வழுக்கி விழுந்துவிட்டது. இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Rajinikanth 171 Movie Title As Coolie Here are the full details

வேட்டையன் ரிலீஸ்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோ நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171: இதற்கிடையே கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது. சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து படம் இயக்க கமிட்டானார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நிச்சயம் கமலுக்கு கொடுத்த மெகா ஹிட் போலவே இந்தப் படத்தை ரஜினிக்கு கொடுக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.

லோகி விஷன்: ரஜினியை வைத்து எப்படிப்பட்ட படத்தை லோகேஷ் கொடுக்கப்போகிறார் என்ற ஆவல் கோலிவுட்டில் இருக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த லோகேஷ், 'நான் கமலின் தீவிர ரசிகராக இருந்தாலும் ரஜினியின் படங்களையும் ஓபனிங் டே ஓபனிங் ஷோ பார்ப்பேன். ரஜினிகாந்த்தை நான் ஒரு விஷனில் பார்க்கிறேன். அப்படித்தான் இந்தப் படமும் இருக்கும். முழுக்க முழுக்க இது ஒரு எக்ஸ்பெரிமெண்ட்டல் படம்தான்” என்றிருந்தார். இதனால் கண்டிப்பாக இந்தப் படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

படத்தின் பெயர்: சில நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 22ஆம் தேதி படத்தின் பெயர் வெளியிடப்படும் என்று போஸ்டருடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டரில் ரஜினிகாந்த்தின் கைகளில் கடிகாரங்களால் ஆன விலங்கு ஒன்று மாட்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக படம் எந்த மாதிரியான ஜானரில் இருக்கும், பெயர் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் பெயர் இன்று வெளியிடப்ப்டட்டிருக்கிறது.

அதன்படி படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 3 நிமிடங்கள் ஓடக்கூடிய டைட்டில் டீசரில், தங்க பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் ஃபேக்டரிக்குள் வரும் ரஜினிகாந்த் மாஸாக சண்டை செய்கிறார். மேலும், 'எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே; சோறு உண்டு சுகம் உண்டு மது உண்டு மாது உண்டு மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு போடா' என்று கண்ணதாசன் எழுதியதை ரங்கா படத்தில் பேசியது போலவே இதிலும் ரஜினி பேசுகிறார்.

அதேபோல், செண்பகமே செண்பகமே பாடலை விசில் செய்யும் அவர், டைட்டில் டீசரின் முடிவில் முடிச்சிடலாம்மா என்று பஞ்ச் வசனமும் பேசுகிறார். அது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி அனிருத்தும் தனது இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். டைட்டில் டீசரை பார்க்கையில், இந்தப் படம் தங்க கடத்தல் பற்றிய படமாக இருக்குமோ என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். படத்தின் பெயரை பார்த்த ரசிகர்கள் பெயரே மாஸாக இருக்கிறது படத்தில் லோகியின் ட்ரீட்மெண்ட்டும், ரஜினியின் பிரசென்ஸும் வேற மாதிரி இருக்கும் என்று இப்போதே கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X