Rajinikanth 75: முதலமைச்சர் முதல் முன்னாள் மருமகன் வரை.. தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!

சென்னை: டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் குறித்த பேச்சுக்கள் திரையுலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிடும். அப்படி இருக்கும்போது அவரது பிறந்த நாளில் சொல்லவா வேண்டும்? அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து குறிப்பில், " ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலக படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து குறிப்பில், "ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அரை நூற்றாண்டாக கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth 75 Birthday Wishes From PM Modi CM Stalin Vairamuthu Dhanush Karthick Subbaraj And More
Photo Credit:

அதேபோல் கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்து குறிப்பில் இன்று ரீ ரிலீஸ் ஆகும் படையப்பா படத்தின் அனுபவம் குறித்தும் குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார். அதில், "
இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு
பரபரப்புக் குறையாமல்
வெளியாகிறது படையப்பா

மூங்கில் குழாயில் அடைத்து
மூடிப் புதைக்கப்பட்ட தேன்
கால்நூற்றாண்டுக்குப் பிறகு
தோண்டி எடுக்கப்படுகையில்
வீரிய பானமாய்
வெளிப்படுவது மாதிரி,
காலம்கடந்தும் கலக்கவருகிறது
படையப்பா

நான் வெறியெடுத்துப்
பாட்டெழுதிய படங்களுள்
படையப்பாவும் ஒன்று

'வெற்றிக்கொடிகட்டு' பாடல்
எப்போது கேட்டாலும்
என் அத்துணை நரம்புகளும்
பாம்புகளாய்ப் படமெடுக்கும்

மறக்க முடியாத
ஒரு நிகழ்வு சொல்கிறேன்:

படத்தின் முதல் பிரதி
முதலமைச்சருக்குப்
போட்டுக் காட்டப்படுகிறது

விஜயராகவா சாலையில்
தேவி ஸ்ரீதேவி
குறுந்திரையரங்கில்
திரையீடு நிகழ்கிறது

அந்நாள் முதலமைச்சர்
முத்தமிழறிஞர் கலைஞர்,
மேலும் சில அமைச்சர்கள்,
ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார்
நான் மற்றும் சிலர்
படம் பார்க்கிறோம்

படம் நிறைந்தது

கலைஞர் வெளியே வருகிறார்;
யாரும் இல்லை

தினத்தந்தி நிருபர்
கங்காதரன் மட்டும்
எப்படியோ துப்பறிந்து வந்துவிடுகிறார்

"ஐயா!
படம் எப்படி இருக்கிறது" என்று
ஒரு வினாவை வீசுகிறார்

சற்றும் இடைவெளி இல்லாமல்
"படையப்பா;
பழைய சாதனைகளை
உடையப்பா என்றிருக்கிறது"
என்று சொல்லிவிட்டுக்
காரில் ஏறுகிறார் கலைஞர்

அவர் வாக்குப் பொய்க்குமா?
பலித்தது

தன் பிறந்தநாளில்
ரசிகர்களுக்கு ரஜினி வழங்கும்
பாசப் பரிசு படையப்பா

தங்கம் பழையதாகலாம்;
விலை குறையுமா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth 75 Birthday Wishes From PM Modi CM Stalin Vairamuthu Dhanush Karthick Subbaraj And More
Photo Credit:

தனுஷ், கார்த்திக் சுப்பராஜ்: நடிரும் ரஜினியின் முன்னாள் மருமகனும் ரஜினியின் தீவிர ரசிகருமான தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்று வாழ்த்தி அவரை டேக் செய்துள்ளார். அதேபோல் ரஜினியின் வெறித்தனமான ரசிகரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " 75வது பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா. நீண்ட ஆரோக்யமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு எப்போதும் கிடைக்க வாழ்த்துகள். எங்களை தொடர்ந்து உத்வேகப்படுத்துங்கள், மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள், எங்கள் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி, லவ் யூ" என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்: கமல்ஹாசன் தனது வாழ்த்தில், 75 ஆண்டுகள் சிறப்பான வாழ்க்கை, 50 ஆண்டுகள் வெற்றிகரமான சினிமா வாழ்க்கை, எனது நண்பர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X