Rajinikanth: படையப்பா ரீ ரிலீஸ் எல்லாம் ஓகே.. குடும்பத்துல என்ன பேசிக்கிறாங்கனு பாருங்க!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளில் அவரது படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும், எவ்வளவு தியேட்டர்களில் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக அவரது மகள் சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
படையப்பா படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியானது. படம் வெளியாகி சுமார் 26 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், படத்தை மொத்தமாக தூக்கி நிறுத்திய கதாபாத்திரங்கள் என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன். அதேபோல் படத்தை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தான். இப்படி இருக்கும்போது, இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? எப்போது இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வந்ததோ, அதில் இருந்து ரஜினி ரசிகர்கள் காலில் சலங்கை கட்டி விட்டது போல மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படையப்பா ரீ ரிலீஸ்: இப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படையப்பா படத்தின் சில காட்சிகள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தற்போதைய சில வீடியோக்கள் ஆகியவற்றை இணைத்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் பகிர்ந்துள்ள கேப்ஷன் அவரது உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது.
மகள் ரியாக்ஷன்: அதாவது அவரது பதிவில், " கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களை தனது நடிப்பு, ஸ்டைல், அன்பு ஆகியவற்றால் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். இன்று பல லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். தலைவர் இன்றைக்கு தனது தலை சிறந்த படைப்புகளில் ஒன்று குறித்து தனது எண்ணத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். படையப்பா, அவரது இதயத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கதையால் படமாக்கப்பட்ட படையப்பா மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் வெள்ளித் திரையில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. படையப்பா ஒரு படம் அல்ல, அது ஒரு உணர்வு, அது ஒரு எமோஷன்.

தயாராகுங்கள்: திரை வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நமது தலைவரைக் கொண்டாட தயாராகுவோம். தலைவர் மீதான 50 வருட அன்பு, 50 வருட பக்தி என்று கூட சொல்லலாம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











