ஷங்கர் படத்தில் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ஆமீர்கான்?
ஷங்கர் அடுத்து இயக்கப் போகும் படத்தில் ரஜினியுடன் ஆமீர்கானும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சந்திப்பு
ரஜினியும் ஷங்கரும் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினர். இது அடுத்த படத்துக்கான சந்திப்புதான் என்று கூறப்படுகிறது.

எந்திரன் 2
ஏற்கெனவே எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதில் முதலில் ரஜினி நடிப்பார் என்று சொல்லப்பட்டது.

ஆமீர்கான்
பின்னர் பாலிவுட் நடிகர் ஆமீர்கான்தான் நடிக்கப் போகிறார். அவரும் ஷங்கரும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர் என செய்தி வந்தது.

ரஜினி - ஆமீர்
இப்போது ரஜினியும் ஆமீர்கானும் இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய பட்ஜெட்
இந்த இரு சாதனையாளர்களும் இணைந்தால் படத்தின் பட்ஜெட் 200 கோடியைத் தாண்டினாலும் கவலைப்படத் தேவையில்லை. படத்துக்கு உலக அளவில் பெரும் வசூலும் குவியும் என்பதால், இருவரையும் இணைப்பதில் ஷங்கர் தீவிரம் காட்டுகிறாராம்.

கிராபிக்ஸ்
எந்திரன் 2-ம் பாகத்தில் நிறைய கிராபிக்ஸ் மற்றும் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் உள்ளதால், பணம் ஏராளம் தேவைப்படும். எனவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு செலவழித்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறாராம் ஷங்கர்.

பாலிவுட்டில்
ரஜினி - ஆமீர் இணைந்து படம் பண்ணுகிறார்கள் என்பதுதான் இன்றைக்கு பாலிவுட் மீடியாவில் பரபரப்பு செய்தியாகவும் உள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரியில் தொடங்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ரஜினி, ஷங்கர், ஆமீர்கான் மூவருமே இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











