அரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா?

By Siva

சென்னை: ரஜினி தொடர்ந்து 5 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் போன்ற தீவிர ரசிகனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

படம் பார்த்து ரஜினி ரசிகர்கள் இம்பிரஸ்ஸாகிவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.

அரசியல்

அரசியல்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குகிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். பேட்ட படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

5 படங்கள்

5 படங்கள்

ரஜினி முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ் தவிர்த்து கே.எஸ். ரவிக்குமார், ராஜமவுலி, சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் இயக்கத்திலும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 படங்கள் என்றால் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடித்து முடித்துவிட்டு தான் அரசியலுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல்

தேர்தல்

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தினால் ரஜினிகாந்த் எப்பொழுது கட்சி துவங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அவர் மீதான மவுசு குறையத் துவங்கியுள்ளது இந்தியா டுடே கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது. நாட்டு நடப்பு குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகள் மக்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர் படங்களில் கவனம் செலுத்துவதை பார்த்து அவர் அரசியலுக்கு வருவார் ஆனால் வர மாட்டார் என்று விமர்சிக்கிறார்கள்.

கமல்

கமல்

சோறு போட்டு வாழ்க்கை கொடுத்த சினிமா தொழிலை மக்கள் சேவை செய்ய விட வேண்டியது இல்லை என்றார் கமல் ஹாஸன். பின்னர் என்ன நினைத்தாரோ அவர் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துவிட்டார். ஒரு வேளை கமல் கூறியது போன்று நடித்துக் கொண்டே அரசியல் பண்ணப் போகிறாரோ ரஜினிகாந்த்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X